NEWS
மனிதர்களை நாய் ஏன் மோப்பம் பிடிக்கிறது தெரியுமா?.. இதுவரை பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல் இதோ..!
பொதுவாகவே நாம் சாலையில் நடந்து செல்லும் போது ஏதாவது நாய் இருந்தால் அது உடனே வந்து திடீரென மோப்பம் பிடிப்பதை அனைவரும் பார்த்திருப்போம். அதிக தெரு நாய்கள் இருக்கும் இடத்தில் இப்படியான அனுபவங்களை நாம் சந்தித்திருக்கலாம். சிலர் நாய் கடிக்க வருவதாக நினைத்து பயப்படுவார்கள். ஆனால் நாய் அருகில் ஓடி வரும்போது அமைதியாக இருந்தால் அது மோசம் பிடித்து விட்டு சென்று விடும். உங்களை நாய் மோப்பம் பிடிப்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம். மனிதர்களை விட அதிக மோப்ப சக்தியை கொண்டிருக்கும் நாய் மூக்கில் அதிக வாசனை செல்கள் இருக்கின்றன.
மனிதர்களாகிய நம்மிடம் ஆறு மில்லியன் வாசனை செல்கள் மூக்கில் இருக்கிறது என்றால் நாய்களிடம் சுமார் 100 முதல் 300 மில்லியன் வாசனை செல்கள் இருக்கும். இதனால் மனிதர்களை பார்த்ததும் பல காரணங்களுக்காக நாய் அருகில் வந்து மோப்பம் பிடிக்கின்றது. நாய்கள் அவை வசிக்கக் கூடிய இடத்தில் உள்ள மனிதர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ள மனிதர்களை நோக்கம் பிடிக்கும்.
அதற்கான காரணம் நாய்களுக்கு பேச முடியாது என்பதால் மோப்ப சக்தியை வைத்து தன்னுடன் வாழ்ந்த மனிதர்களை எளிதில் அடையாளம் கொள்ளும். இதற்காகவே நாய்களிடம் பெரோமொன்கள் என்ற ஹார்மோன்கள் உள்ளது. இந்த ஹார்மோனை வைத்து ஒருவரின் அடையாளம், உணர்ச்சியை மற்றும் ஆரோக்கியத்தை நாய்கள் எளிதில் தெரிந்து கொள்ளும். மனிதர்களை மோசம் பிடிப்பது அவர்களை அடையாளம் கண்டு கொள்ள மட்டுமல்ல தன்னுடைய நன்றியை காட்டுவதற்காகவும் தான்.
ஒருவரின் மீதான அன்பை வெளிக்காட்டவும் நாய்கள் முகர்ந்து பார்க்கும். நாய்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவை. ஒவ்வொரு முறையும் மனிதர்கள் சென்று வரும்போது அவர்களை ஆராய்ந்து கொள்ளும். அப்போது மனிதர்களிடமிருந்து வெளிப்படும் வாசனையை முகர்ந்து கொள்ளும். நாய்கள் சோர்வாக இருக்கும் போது தங்களை சுறுசுறுப்பாக்கிக் கொள்ள மனிதர்களிடம் வந்து வேகமாக மோசம் பிடிக்கும்.
இப்படியான அணுகுமுறை அதற்கு சாந்தத்தை கொடுக்கும். இதனால்தான் ராணுவம் மற்றும் போலீசில் இருக்கக்கூடிய நாய்களுக்கு பிரத்தியேகமாக மோப்ப பயிற்சி கொடுக்கப்படும். இது குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கும் ஆபத்தான பொருட்கள் இருக்கக்கூடிய இடத்தை கண்டறியவும் பெரிதும் உதவியாக இருக்கும்.