CINEMA
போடு வெடிய.. ரூ.1000 கோடி கன்பார்ம்.. G.O.A.T படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் கோட் திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி இரண்டாவது படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் படத்தை கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு திரையரங்குகளில் சோலோவாக திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கோட் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் பட குழு வெளியிட்ட பாடல்களில் அனைத்து பாடல்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. படத்தில் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஆங்காங்கே சில காட்சிகளுக்கு பின்னணி இசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அண்டை மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஒன்பது மணி காட்சிக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோட் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 45 கோடிகள் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 38 கோடியும்,மலையாளத்தில் இரண்டு கோடியும் தெலுங்கில் இரண்டு கோடியும் வசூல் செய்துள்ளது.
முதல் நாளே நல்ல வசூல் குவித்துள்ளதால் ரசிகர்களும் பட குழுவினரும் கூறியதைப் போல படம் ஆயிரம் கோடி வசூலை படைத்த முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது விஜய் நடிப்பில் வெளியான முந்தைய படமான லியோவின் முதல் நாள் வசூலை விட குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.