NEWS
வெறும் 5 ஆண்டு முதலீடு, ரூ.10 லட்சம் வருமானம்.. SBI வங்கியின் சூப்பரான சேமிப்பு திட்டம்..!
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை வைத்துள்ள இந்த வங்கியை தினம் தோறும் ஏராளமான மக்கள் அணுகுகின்றனர். கடன் பெறுவது மற்றும் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு மக்களின் அத்தியாவசிய தேவைகளை எஸ்பிஐ வங்கி பூர்த்தி செய்து வருகிறது.
அது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வரும் நிலையில் அதில் முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் சூப்பர் ஹிட். இந்த புதிய சேமிப்பு திட்டத்தில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை நீங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். வெவ்வேறு கால முறைகளில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யும் போது இறுதியில் வட்டி தொகையுடன் சேர்த்து அசலும் உங்களுக்கு கிடைக்கும்.
எஸ்பிஐ வங்கியின் இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 10 லட்சத்தை நீங்கள் முதலீடு செய்யும் போது வருடத்திற்கு 6.80 சதவீதம் வட்டி உங்களுக்கு கிடைக்கும். இதன் மூலமாக வட்டி மட்டுமே ரூ.69,753 நீங்கள் பெறலாம். மொத்தமாக இறுதியில் முதிர்வு தொகையாக ரூ.10,69,753 உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் இரண்டு வருடத்திற்கு 10 லட்சத்தை நீங்கள் முதலீடு செய்யும் போது ஏழு சதவீத வட்டி விகிதம் மூலமாக வட்டி மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1,48,881 கிடைக்கும். இறுதியில் முதிர்வு தொகையாக நீங்கள் ரூ.11,48,881 பெற முடியும்.
நீங்கள் இதில் முதலீடு செய்யும் காலத்தையும் தொகையையும் பொறுத்து வட்டி தொகையும் மாறுபடும். இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் குறைந்த வருமானத்தில் அதிக முதலீட்டை நீங்கள் பெற முடியும். எனவே நீங்கள் வயதான காலத்தில் ஒரு நிலையான வருமானம் பெற வேண்டுமென்றால் இப்போதே இந்த திட்டத்தில் சேமிக்க தொடங்குங்கள்.