Connect with us

நீதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே, முடிஞ்சா வேதிகா கிட்ட அத பண்ண வேண்டியதுதானே.. இயக்குனர் பாலாவை விளாசிய காஜல் பசுபதி..!

CINEMA

நீதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே, முடிஞ்சா வேதிகா கிட்ட அத பண்ண வேண்டியதுதானே.. இயக்குனர் பாலாவை விளாசிய காஜல் பசுபதி..!

கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பல நடிகர்களின் வயிற்றில் புலியை கரைத்துள்ளது. இந்த விஷயத்தில் கேரளாவில் மட்டுமல்ல பெண்கள் எங்கெல்லாம் வேலை செய்கிறார்களோ அங்கெல்லாம் இந்த பிரச்சனை உள்ளது. இது தொடர்பாக நடிகைகள் பலரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஹேமா கமிட்டி குறித்து பேசி உள்ள நடிகை காஜல் பசுபதி, சினிமா கனவோடு வரும் பெண்கள் வேறு வழியில்லை என்பதற்காக இந்த அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஒத்து கொள்கின்றனர்.

   

அதில் ஒரு சிலர் என்னிடம் திறமை இருக்கு நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என்று வாய்ப்பு வரும் வரை காத்திருக்கிறார்கள். அதுவும் வெள்ளையாக இருந்து விட்டால் போதும் தேடி தேடி வாய்ப்புகள் வந்து சேரும். நான் கருப்பு, அது மட்டுமல்லாமல் ரூடா கேள்வி கேட்பேன் என்பதால் எனக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நாம் திரையில் பார்த்து பிரமித்து போன ஒரு இயக்குனரின் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக நான் சென்றேன்.

   

 

அப்போது கையைப் பிடித்துக் குலுக்கி விரலால் சுண்டி அட்ஜஸ்மெண்டுக்கு ஓகேவா என்று சிக்னல் கொடுத்தார். நான் எதுவும் பேசாமல் பத்து நாள் ஷூட்டிங் போய்விடும் என்று அமைதியாக இருந்து விட்டேன். இப்படி பல இயக்குனர்களும் சில நேரங்களில் அதிகமாக நடந்து கொள்கின்றனர். அதனைப் போலவே பரதேசி திரைப்படத்தின் போது அந்த தேயிலை தோட்டத்தில் வேதிகாவை அடிப்பது போல ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் நடித்துக் காட்டிய பாலா, வேதிகாவை அடிக்காமல் அங்கிருந்த ஒரு துணை நடிகையை அழைத்து கடுமையாக அடித்து காண்பித்தார்.

இதனைப் பார்த்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. அவர்தான் ரொம்ப தைரியமான ஆளாச்சே, ஹீரோயினியை அடிக்க வேண்டியது தானே, அவரால் ஹீரோயினியை அடிக்க முடியாதா, அந்த துணை நடிகைக்கு நடந்தது எனக்கு நடந்து இருந்தால் நான் நிச்சயம் கேட்டு இருப்பேன். ஆனால் அப்போது அதை பார்த்துவிட்டு நான் அமைதியாக இருந்தேன் என்று காஜல் அகர்வால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

author avatar
Nanthini
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top