Connect with us

CINEMA

நெருங்கிய நண்பரான ஜெய்சங்கரின் இறப்புக்கே போகாத ரஜினி… அதுக்கு சொன்ன காரணம்தான் செம்ம!

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பழம்பெறும் நடிகர் ஜெய்சங்கர். இவர் பெரும்பாலும் சண்டைக் காட்சிகள், துப்பறிவாளன், காவலர் போன்ற வேடங்களில் தான் அதிகம் நடித்திருப்பார். இதனால் இவர் ‘தென்னிந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட்’ என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1965 ஆம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து பலபடங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். வாரா வாரம் வெள்ளிக்கிழமையானால் ஜெய்சங்கர் நடித்த ஒரு படமாவது வெளியாகும் என்ற சூழல் உருவானது. இதனால் தமிழ் சினிமாவில் ஜெய் சங்கரை வெள்ளிக்கிழமை ஹீரோ என்றே அழைத்தார்கள்.

   

ஆனால் 80 களின் தொடக்கத்தில் ஜெய்சங்கர் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். இதனால் ரஜினி கமல் போன்ற இளம் தலைமுறை நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ரஜினியின் முரட்டுக் காளை படத்தில் அவர் வில்லனாக அவருக்கு அந்த வேடம் ஒரு செகண்ட் இன்னிங்ஸாக அமைந்தது. அந்த படத்தின் மூலம் ரஜினிக்கும் அவருக்கும் நெருக்கமான நட்பு உருவானது. இருவரும் இணைது பல படங்களில் நடித்தனர். கடைசியாக அருணாசலம் படத்தில் இணைந்து நடித்தனர்.

ஜெய் சங்கர் 2002ல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அப்போது தமிழ் சினிமாவில் இருந்த அனைத்து கலைஞர்களும் சென்றனர். ஆனால் நெருங்கிய நண்பரான ரஜினி மட்டும் செல்லவில்லை. சில் நாட்களுக்குப் பிறகு அவரது குடும்பத்தினரைப் பார்க்க சென்ற ரஜினி “என்னால் ஜெய் சாரை உயிரில்லாமல் வெறும் உடலாக பார்க்க முடியாது. அவரை எப்போதும் நான் சுறுசுறுப்பாக லைவ்வாக பார்த்தவன். என்னால் அவரை இறந்த நிலையில் பார்க்க முடியவில்லை” என்று கூறினாராம். இந்த தகவலை ஜெய் சங்கரின் மகன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஜய் சங்கர் இவர் கண் மருத்துவராக உள்ளார். இளைய மகன் சஞ்சய் சங்கர் இவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் இசை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

Continue Reading

More in CINEMA

To Top