om

“ஓம்” பிரணவ மந்திரம் என்று ஏன் அழைக்கப்படுகிறது…? அதன் சிறப்புகள் என்ன…?

By Meena on டிசம்பர் 1, 2024

Spread the love

ஓம் எனும் மந்திரம் மிகவும் புனிதமானது. பிரபஞ்சத்தின் ஒலியே ஓம் தான். ஓம்காரத்தில் தான் பிரபஞ்சம் சுற்றுகிறது என்று இந்து மத சாஸ்திரப்படி கூறுவார்கள். இந்து மதத்தில் ஓம் மிகவும் முக்கியமாய்ந்தது. அது சக்தி வாய்ந்த மந்திரம் என்று கூறுவார்கள். இந்த ஓம் என்பது பிரணவ மந்திரம் என்று ஏன் அழைக்கப்படுகிறது. அதன் சிறப்புகள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

இந்து மத வழிபாட்டில் கூறப்படும் மந்திரத்தின் ஒரு பகுதி ஓம். பிரணவம் என்பது சிருஷ்டிக்கு முன் இருந்த முதல் ஒலியும் பிரளயத்திற்கு பின் இருக்கும் ஒலியும் ஆகும். ஓம் என்பது கடவுளை தான் குறிக்கிறது. உருவமற்ற பெயற் கடவுளின் நித்திய பேரின்பத்திற்கான பாதையாக மகாயோகிகள் இந்த ஓம் மந்திரத்தை மனதில் வைத்து தியானித்து இருந்திருக்கிறார்கள்.

   

இந்தப் பிரணவம் என்பது ஐந்து பகுதிகளை கொண்டது. அகார உக்கார மகர பிந்து நாதம் ஆகியவை ஆகும். மிகவும் மகிமை வாய்ந்த பஞ்சாப்ஷண மந்திரங்களில் இது ஒன்றாகும். பூமியின் மேல் வளிமண்டலம் எனப்படும் பிரபஞ்சத்தின் ஒலியை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூட இந்த ஒலியை ஓம் உடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார்கள்.

 

இந்த ஓம் என்ற மந்திரத்தை நாம் ஜெபித்து கொண்டே இருக்கும்போது அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம். உடலையும் உள்ளத்தையும் சீராக வைக்க உதவுவது இந்த ஓம் எனும் மந்திரம். இந்த ஓம் மந்திரத்தை கூறி பிரார்த்தனை செய்யும் ஒவ்வொன்றும் பலன் கிடைக்கும் என்ற கூறப்படுகிறது மற்றும் அந்த ஓம் என்ற ஒலி எழுப்பும்போதே மூச்சுக்காற்று நம் உடம்பிற்குள் போய் வெளி வருகிறது. இது நம் உடலை சுத்தப்படுத்தும் ஒரு முறையாகவும் பார்க்கப்படுகிறது. ஓம் என்ற மந்திரத்தை நாம் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்கும்போது அதனால் ஒரு சக்தி ஏற்பட்டு நம்மை சுற்றி இருக்கும் கெட்டவைகளை அழித்து நல்லவை ஏற்படும் என்பது ஐதீகம்.