worm

அடிக்கடி வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும் குடற்புழு… அதை நீக்கும் எளிமையான முறைகள் இதோ…

By Meena on டிசம்பர் 1, 2024

Spread the love

நாம் பலவித உணவுகளை சாப்பிடுவோம். அதில் நல்லதுக்கு இருக்கும் கெட்டதும் இருக்கும். நல்ல உணவுகளை சாப்பிட்டாலும் கூட அதில் கலந்து இருக்கும் ரசாயனமோ மற்றும் சில பொருட்கள் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். வயிற்று உபாதைகள் அடிக்கடி ஏற்படுவதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் குடற்புழு. பொதுவாக சிறியவர்கள் பெரியவர்கள் யாராக இருந்தாலும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை Deworming மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அது எடுத்துக்கொண்ட பின்னரும் சிலருக்கு குடற்புழுவால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இனி காண்போம்.

   

வயிற்றில் புழுக்கள் இருந்தால் செரிமானம் சரியாக நடக்காது. அதனால் வயிற்றெரிச்சல் வலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். குடற்புழு பிரச்சனை வந்துவிட்டால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய முறையில் வெளியேற்ற முடியும்.

   

வீட்டில் இருக்கும் சீரகத்தை மம் வரும் வரை கடாயில் வறுத்த பின்பு கொதிக்க வைத்தோ அல்லது ஊற வைத்தோ அந்த நீரை பருகும் போது குடற்புழு வெளியேறிவிடும். துளசி இலைகளை வேக வைத்து அதன் தண்ணீரை பானமாக குடித்தாலும் குடற்புழுக்கள் வெளியேறிவிடும். துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு கிருமியை கொல்லும் ஆற்றலும் கொண்டது.

 

சும்மா இருக்கும்போது ஒன்று இரண்டு கிராம்புகளை வாயில் போட்டு மென்று கொண்டிருக்கும் போது இந்த கிராமின் சாறு வயிற்றுக்குள்ளே செல்லும் போது அது குடற்புழுக்களை வெளியேற்றும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கிராம்பு நல்ல ஒரு மருந்தாகும். அடுத்ததாக மாதத்துக்கு ஒருமுறை கொழுந்து வேப்பிலை இலைகளை எடுத்து அரைத்து அந்தச் சாறை எடுத்து குடித்தாலும் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையம் இது சரி செய்யும். இது போன்ற வீட்டு வைத்திய முறைகளை எடுக்கும்போது நமக்கு எந்த ஒரு பின் விளைவுகளும் ஏற்படாது. உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்.