தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலும் சினிமாவிலும் தனக்கென தனி சிம்மாசனத்தை போட்டு அமர்ந்திருந்தவர் MGR.
MGR படங்கள் என்றால் ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் MGR. தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இருக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் MGR.
MGR நல்ல குணம் கொண்டவர் உதவும் மனப்பான்மை கொண்டவர். அனைவருக்கும் மரியாதை கொடுக்க கூடியவர். தன்னை நாடி கையேந்தி வந்த அனைவருக்கும் அள்ளிக் கொடுப்பவர். அப்படி எம்ஜிஆர் வாலிக்கு செய்த ஒரு செயலை பற்றி இனி காண்போம்.
ஒருமுறை எம்ஜிஆர் அன்னமிட்ட கை என்ற படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பாடல் ஆசிரியராக வாலி நியமிக்கப்பட்டிருந்தார். வாலியின் மனைவி பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆபரேஷன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தயாரிப்பாளர் சிவசாமி போன் செய்து நீங்க வாங்க பாடலை எழுதணும் என்று கூப்பிட்டு இருக்கிறார்.
உடனே வாலி என் மனைவிக்கு ஆபரேஷன் நடந்துட்டு இருக்கு நான் எப்படி வருவது என்று கேட்டிருக்கிறார். நீங்களா ஆபரேஷன் செய்றீங்க என்று தயாரிப்பாளர் சொன்னதும் ஒருமையில் திட்டி விட்டு வாலி போனை கட் செய்து இருக்கிறார். இதை அறிந்த எம்ஜிஆர் மறுநாள் ஆஸ்பத்திரிக்கு சென்று சிவசாமி அப்படி பேசியதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். நீங்க மெதுவா ரெண்டு மூணு நாள் கழிச்சு கூட வந்து பாட்டு எழுதலாம் என்று கூறிவிட்டு பிறந்த குழந்தையின் கையில் ஒரு பவுன் தங்கக் காசை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் எம்ஜிஆர். இதிலிருந்து அவர் எவ்ளோ நல்ல மனசுக்கு சொந்தக்காரர் எம்ஜிஆர் என்பது தெரிகிறது.