rajini

இப்போதெல்லாம் ஏன் Hero களுக்கு Intro பாடல் வருவதில்லை…? பாடலாசிரியர்கள் ஹீரோகளுக்கு ஜால்ராவா…?

By Meena on நவம்பர் 30, 2024

Spread the love

தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஹீரோ தனித்துவமாக தெரிவதற்கான பாடல்களும் இருக்கும் ஒவ்வொரு பத்து ஆண்டுகள் இடைவெளியில் சினிமா ஒரு பரிணாமம் பெறும். ஆரம்பத்தில் எம்ஜிஆர் சிவாஜி ஆகியோர் உச்சத்தில் இருந்தனர்.

   

ரஜினி கமல் பிறகு விஜய் அஜித் தற்போது பல நடிகர்கள் இருக்கிறார்கள். சினிமா என்று வந்தாலே ஹீரோ Introவிற்கு மாஸாக ஏதாவது ஒன்று வைத்திருப்பார்கள். முந்தைய காலத்தில் ஹீரோவுக்கு என்று பாடல்கள் என்று இருந்தது. அந்த பாடல்களில் மக்களுக்கு தேவையான கருத்துக்களை வைத்து பாடல்களை உருவாக்கி இருப்பார்கள்.

   

உதாரணமாக ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் எட்டு எட்டா வாழ்க்கை இருக்கு பிரிச்சுகோ போன்ற பாடல் விஜய்க்கு போக்கிரி படத்தில் திருப்பாச்சி படத்தில் என பல படங்களில் சமூக நீதி கருத்துக்கான பாடல்கள் இருந்து வந்தது.

 

சமீப காலத்தில் வரக்கூடிய படங்களில் எதுவுமே ஹீரோவுக்கு என்று Intro பாடல் என்பதே இல்லை. இதைப்பற்றி ஒரு வாசகர் வலைப்பேச்சு சேனல் நடத்தும் அந்தணன் பிஸ்மி ஆகியோரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு அவர்கள் ஒரு பதில் கூறியிருக்கிறார்கள்.

அவர்கள் கூறியது என்னவென்றால் ஹீரோக்கள் தங்களைத் தானே தீதி தளபதி சூப்பர் ஸ்டார் என்று சொல்வது போல பாடல்களை வைத்து விடுகிறார்கள். அந்த காலத்தில் போல கருத்துதான பாடல்களை கேட்க இன்றைய 2K கிட்ஸ்க்கு விருப்பமில்லை. அப்படி ஏதாவது செய்தால் பூமர் என்று சொல்லிவிடுகிறார்கள். அதனால் பாடலாசிரியர்கள் நடிகர்களை பெயர்களை வைத்து பாடலை எழுதுகிறார்கள். முதலில் பார்க்கப் போனால் நடிகர்கள் சொன்னால்தான் பாடல் ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனால் அவர்களுக்கு ஜால்ரா தட்டுவது போலவே தான் பாடலையும் எழுதுகிறார்கள் என்று ஓபனாக பகிர்ந்திருக்கிறார்கள்.