பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்டவற்றை போலவே காதலர் தினத்தை குறிவைத்து புதிய படங்கள் ரிலீஸ் ஆகும். குறிப்பாக காதல் கதைகளை கொண்ட திரைப்படங்களை உருவாக்கி அந்த தினத்தில் வெளியிட்டு கல்லா கட்டுவார்கள் தயாரிப்பளர்கள். 80, 90களில் நிறைய காதல் படங்கள் உருவானது. இது போன்ற படங்கள் ஒரு பக்கமும் மறுபக்கம் ஆக்ஷன் படங்களும் வெளியாகி கல்லாகட்டும். காதல், ஆக்சன் இது இரண்டு தான் படத்தை வெற்றி அடைய வைக்கும் இரண்டு வழிகள் என்பது தயாரிப்பாளர்களுடைய எண்ணம். இந்த நிலையில் தான் 2025 ஆம் வருடம் பிப்ரவரி 14-ம் தேதியான காதலர் தினத்தன்று என்னென்ன படங்கள் வெளியாகிறது என்று குறித்து பார்க்கலாம்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷின் சகோதரி மகன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை தனுஷ் தயாரித்து இயக்குகிறார். அனிதா சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த படத்தில் கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
அடுத்ததாக ஆர்யா கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் படமும் காதலர் தினத்தில் தான் வெளியாக உள்ளது .
அதேபோல கவின் இயக்கத்தில் உருவாகியுள்ள கிஸ் படமும் காதலர் தினத்தில் தான் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நடன இயக்குனர் சதீஷ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டிருப்பதால் ரிலீஸ் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.