தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருப்பவர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றியா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அதனால் அவருக்கு சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருந்தார் விஜய்.
பின்னர் நடிகர் விஜய் தனது 18-வது வயதில் நாயகனாக அறிமுகம் ஆனார். 1990களில் குடும்பக்கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த விஜய் 2000 காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2010 காலகட்டத்திற்கு பிறகு கமர்சியல் படங்களில் நடிக்க ஆரம்பித்த விஜய் புகழின் உச்சிக்கு சென்றார்.
விஜய் படங்கள் வந்தாலே ஹிட்டுதான் மெகா பிளாக்பஸ்டர் வசூல் சாதனை செய்யும். அப்படி புகழின் உச்சியில் இருக்கும் போது நடிகர் விஜய் சினிமாவை விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்து அரசியலில் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று விரும்பி களமிறங்கி இருக்கிறார்.
விஜய் சினிமாவை விட்டு ஓய்வு பெற போகிறேன் என்று அறிவித்த இந்த நேரத்தில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். ராயன் படத்தில் நடித்து பிரபலமான சந்திப் கிஷானை நாயகனாக வைத்து படம் இயக்குகிறார்.
இந்தத் திரைப்படத்தை தயாரிக்க இருப்பது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் இசை தமன் ஆகும். இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற தகவல் இணையத்தில் கசிந்திருக்கிறது. அது என்னவென்றால் ஜேசன் விஜய் இயக்கவிருக்கும் இந்த படத்தின் கதை “எதை நீ இழந்தாயோ எங்கு இழந்தாயோ அந்த இடத்திலேயே தேடினால் கிடைக்கும்” என்பதுதான் இந்த படத்தின் ஸ்டோரி லைன் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 2025 இல் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.