எதிர்பாராததை எதிர்பாருங்கள்..! நாளை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவரா..?

By Soundarya on நவம்பர் 30, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் மாதம் கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் ரியா, வர்ஷினி ஆகிய ஆறு பேர் இதுவரை எலிமினேட் ஆகியுள்ளனர். இதனைத் தவிர சமீபத்தில் ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் களம் இறக்கியது.

#image_title

இதனைத் தொடர்ந்து மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர்.  பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்ட அவர்களுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் பிக் பாஸ் குழுவின் இந்த புது பிளான் வொர்க் அவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   
   

 

ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாக இருப்பது டல் அடிக்கும் வகையில் இருப்பதால் பிக் பாஸ் இந்த பாய்ஸ் வெர்ஷன் கேர்ள்ஸ் என்ற நடைமுறையை கைவிடுவிட்டார். தற்போது வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும் வீட்டில் காதலும் மலர்ந்துள்ளது. விஷால்-தர்ஷிகா இடையே காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையில் போட்டியாளர்களுக்கு பொம்மை டாஸ்க் நடந்தது.

இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடி  வீடே களேபரமாகி ஒருவழியாக முடிவுக்குவந்துவிட்டது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வரும் நிலையில் இந்தவாரம் நாமினேஷன் லிஸ்டில் கடைசியில் மஞ்சரி, சிவகுமார், சாச்சனா ஆகியோர் இருக்கும் நிலையில் சிவகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளார்.

author avatar
Soundarya