otp

கிரெடிட் கார்டு, OTP, சிலிண்டர் விலை என டிசம்பர் 1 முதல் வரவிருக்கும் மாற்றங்கள்… எல்லாத்துக்கும் தயாராகுங்க….

By Meena on நவம்பர் 30, 2024

Spread the love

2024 ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கிறது. இன்னும் ஒரு மாத காலமே பாக்கியிருக்கிறது. நாளை டிசம்பர் 1 ஆரம்பிக்கிறது. ஆனால் இந்த டிசம்பரில் தான் பலவித மாற்றங்கள் ஏற்படவும் இருக்கிறது. கிரெடிட் கார்டு OTP சிலிண்டர் விலை என பல விஷயங்களில் மாற்றம் ஏற்பட இருக்கிறது. அது என்னவென்று தெரிந்து கொண்டு தயாராகுங்கள். இதைப் பற்றி இனி காண்போம்.

   

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் மோசடி நடைபெறுவதை தடுப்பதற்காக டிராய் பலவித மாற்றங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தது. தங்களது பயனர்களின் தரவை பாதுகாக்கவும் tracability அமல்படுத்த காலக்கடவு இன்றோடு முடிகிறது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொலைதொடர்பு நிறுவனங்கள் ட்ராயின் கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும்.

   

இதன் காரணத்தால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் சில டெலிகாம் சேவைகளில் OTP கிடைப்பது தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக உலகின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் மாலத்தீவுக்கு செல்லக்கூடிய விமான பயண கட்டணங்கள் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கணிசமாக அதிகரிக்கப்பட உள்ளது.

 

ஒவ்வொரு மாதமும் பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுவது சிலிண்டர் விலையை பற்றி தான். அக்டோபரில் எரிவாயு நிறுவனங்கள் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலையில் ரூ 48 உயர்த்தியது. உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தும் விதிகளும் மாற்றப்படுகிறது. ஹோட்டல்கள் ரிவார்டு புள்ளிகளின் எண்ணிக்கையை எஸ் வங்கி கட்டுப்படுத்தும். எச்டிஎப்சி வங்கி அதை கிரெடிட் கார்டுகளின் பயன்களுக்கான அணுகல் விதிகளையும் மாற்றுகிறது. இதுபோல ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அக்சீஸ் வங்கி பல்வேறு பயனர்களுக்கு புள்ளிவிதிகள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை திருத்தி இருக்கிறது. இவையெல்லாம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மக்கள் இந்த மாற்றங்களுக்கு ஏற்றார் போல் தங்களை தயார் படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம் ஆகும்.