பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு பிரியாணி. அதிலேயே சென்னை பிரியாணி, ஆம்பூர் பிரியாணி தலப்பாகட்டி பிரியாணி ஆற்காடு பிரியாணி என பல வகைகள் உண்டு. இதில் மிகவும் பழமை வாய்ந்ததும் பிரபலம் புகழ்வாய்ந்த இருப்பது தான் இந்த தலப்பாகட்டி பிரியாணி. திண்டுக்கல் பகுதிகளில் தலப்பாகட்டி நாயுடு கடை என்று அழைக்கப்படுகிறது.
1952 ஆம் ஆண்டு நாகசாமி நாயுடு என்பவரால் தொடங்கப்பட்டது தான் தலப்பாக்கட்டி பிரியாணி. இவர் எப்போதும் தலப்பா ஒன்றை கட்டியிருப்பதால் இவரை தலப்பாக்கட்டி நாகசாமி நாயுடு என்று கூப்பிட ஆரம்பித்தனர். அதுவே தலப்பாகட்டி நாயுடு பிரியாணி என்றனர் பின்னர் தலப்பாகட்டி பிரியாணி என்று ஆனது. திண்டுக்கல்லில் ஆரம்பித்த தலப்பாக்கட்டி பிரியாணி தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் கொண்டு இருக்கிறது.
திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி அதன் தனி சுவைக்கு பெயர் பெற்றது. நல்ல சீரக சம்பா அரிசியில் நயமான கறிகளை போட்டு தயாரிக்கப்படும் இந்த பிரியாணியை நினைத்தாலே நாக்கில் எச்சி ஊரும். அப்படிப்பட்ட இந்த பிரியாணியின் சுவைக்கு என்ன காரணம் ஏன் இந்த பிரியாணி மட்டும் விலை அதிகமாக இருக்கிறது என்பதை பற்றி தலப்பாக்கட்டி பிரியாணியின் தற்போதைய தலைவர் நாகசாமி பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால் எங்கள் தாத்தா காலத்தில் பயன்படுத்தப்பட்ட அதே ரெசிபியை நாங்கள் பாலோ செய்து வருகிறோம். ரகசிய இன்கிரிடியன்ஸ் கொண்டு செய்கிறோம். பொருட்கள் எல்லாம் தரத்திலும் அதி உயர்ந்த மிகத் தரமான பொருட்களை தான் எங்களது பிரியாணிகளில் பயன்படுத்துகிறோம். கறி ஆந்திரா மாநிலத்தில் இருந்து வருகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து தான் நாங்கள் பிரியாணி செய்கிறோம். பொதுவாக ஒரு கிலோ பிரியாணிக்கு ஒரு கிலோ கறி சேர்ப்பார்கள். நாங்கள் ஒரு கிலோ பிரியாணிக்கு இரண்டு கிலோ கறி சேர்த்து தான் செய்வோம். அதனால்தான் எங்களது பிரியாணியின் தனித்துவத்திற்கு தான் இவ்வளவு விலை. இது மட்டுமல்லாமல் தினமும் 5000 கிலோ பிரியாணியும் வார இறுதி நாட்களில் 10 ஆயிரம் கிலோ பிரியாணி வரை விற்பனை செய்து கொண்டிருக்கிறோம் என்று பகிர்ந்து இருக்கிறார் நாகசாமி.