தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். அடுத்து அவர் நடிப்பில் உருவான ஏப்ரல் மாதத்தில் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன.
ஆனால் அதன் பிறகு தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்களில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்துள்ளார். 2010 ஆம் வருடம் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் துரோகி.
இந்த படத்தில் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் சுதா கொங்கராவின் முதல் படம். சுதா கே.பிரசாத் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இது தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரீகாந்த், வட சென்னையில் ஷூட்டிங்க் எடுப்பது ரொம்ப கஷ்டம். முதலில் அந்த இடத்துல பழக சொன்னாங்க.
பைக்கிலேயே டெய்லி சுத்தி வருவோம். ஆனா அந்த படத்துல இன்னும் பண்ணிருக்கலாமோனு தோணுச்சு. எனக்கு என்னமோ அக்கினி நட்சத்திரத்தை எடுத்து காட்டுறமாதிரி இருந்துச்சி. சுதா கொங்கரா தான் என்னுடைய அந்த கெட்டப் க்கு காரணம். அவங்களை நான் பாராட்டுவேன் என்று கூறியுள்ளார்.