depression

இன்றைய காலகட்டத்தில் இளம்வயது மரணங்கள் ஏன் அதிகமாக நடக்கிறது…? நாம் செய்யவேண்டிய மாற்றம் என்ன…?

By Meena on அக்டோபர் 20, 2024

Spread the love

தற்போதைய காலகட்டத்தில் அனைவரையும் மிரள வைப்பதும் வேதனை அடைய வைப்பதும் பயமுறுத்துவதும் இளம் வயது மரணங்கள். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்த இளம் வயது மரணங்கள் அளவுக்கு அதிகமாகவே ஆகிவிட்டது. நன்றாக அன்றாட பணிகளை செய்து கொண்டிருப்பவர்கள் திடீரென்று சுருண்டு விழுந்து இறந்து போவது யாருக்காக இருந்தாலும் பதற்றத்தை வரவழைக்கும். இளம் வயதிலேயே அரிய நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் உண்டு.

   

இதெல்லாம் ஏன் நடக்கிறது நம் முன்னோர்கள் காலத்தில் இப்படி எல்லாம் நடக்கவில்லையே அவர்கள் எல்லாம் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழ்ந்து இருக்கிறார்கள் தற்போது மட்டும் இப்படி நடப்பதற்கு காரணம் என்ன என்று பார்க்கப் போனால் அனைத்திற்கும் காரணம் மக்களாகிய நாம் தான். வாழ்க்கை முறை மாற்றங்கள் தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். யாருக்குமே தங்களது உடல் நலலில் பெரிதாக அக்கறையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எதை எடுத்தாலும் சாப்பிடுவது எது சாப்பிட வேண்டும் சாப்பிடக்கூடாது என்பது இல்லாமல் ஃபாஸ்ட் ஃபுட் மோகத்தில் உடலுக்கு எது ஆகாதோ அதையே தேடி தேடி சாப்பிடுகிறார்கள்.

   

தற்கு அடுத்ததாக உடல் உழைப்பு வெகுவாக இந்த காலத்தில் குறைந்துவிட்டது. அந்த காலத்தில் அம்மியில் மசாலா அரைத்து ஆட்டு உரலில் மாவு அரைத்து இட்லி சாப்பாடு போன்றவர்களை செய்தார்கள். இப்போது எல்லாவற்றையும் இலகுவாக கருவிகள் வந்துவிட்டது. மிக்ஸி வாஷிங் மெஷின் ஏன் பாத்திராம் கழுவ கூட டிஸ்வாசர் வந்துவிட்டது. இதனால் உடல் உழைப்பு இல்லாமல் போகிறது. மேலும் வேலை செய்யும் இடத்தில் கம்ப்யூட்டர் மயமாகி விட்டதால் இருந்த இடத்திலேயே இருந்து வேலை செய்யும் நிலைமையும் உண்டாகிவிட்டது.

 

ஆனால் உண்மையாக பார்க்க போனால் வெயிலில் கடுமையாக உழைப்பவரை காட்டிலும் சியில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு தான் அதிக நோயும் இந்த மரணங்களும் ஏற்படுகிறது என்று சொல்லலாம். இதற்கான மாற்றங்கள் நாம் செய்ய வேண்டியது என்று மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அறிவுறுத்துவதும் எச்சரிப்பதும் என்னவென்றால் நாம் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் உடனடியாக வாழ்க்கை முறையை மாற்றங்கள் ஆரோக்கியமாக உணவுக்கு மாறுங்கள் என்று தான் அவர்கள் அன்றாடம் சொல்கிறார்கள்.

அதிகமாக ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி கட்டாயம் தேவை. ஆறு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையில் ஊட்டச்சத்தான உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் போது நோய்கள் அண்டாமல் தடுக்கலாம். ஏனென்றால் இவ்வுலகை ரசிப்பதற்கும் நம் ஆசைப்பட்டதெல்லாம் செய்வதற்கும் அனுபவத்திற்கும் கட்டாயம் நம் உடல் இருந்தால் தான் உயிர் இருக்கும். அதனால் அந்த உடலை பேணுவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கை முறையை உடனே நீங்கள் மாற்றத்தை கொண்டு வரும்போது இந்த இளம் வயது மரணங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.