பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தற்போது தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் லாஞ்ச் எபிசோட் 9 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. ரவீந்தர் முதலில் எலிமினேட் செய்யப்பட்டார்.
அதன் பிறகு அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது தீபாவளி ஸ்பெஷலாக ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்களை களம் இறக்க பிக் பாஸ் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்க உள்ள பிரபலங்கள் யார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான செவ்வந்தி சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் திவ்யா ஸ்ரீதர். இவர் அர்ணவின் மனைவி ஆவார். இருவரும் சண்டை போட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அடுத்ததாக மிமிக்ரி ஆர்டிஸ்ட்டும், நடிகருமான டி.எஸ்.கே வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுக்க உள்ளார்.
அது மட்டும் இல்லாமல் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஹீரோவாக நடித்த வினோத் பாபு வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுக்க உள்ளார். சூர்யாவின் ஆறு திரைப்படத்தில் சவுண்ட் சரோஜாவாக நடித்த ஐஸ்வர்யா பாஸ்கரன் வைல்டு கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வர உள்ளார். மற்ற ஒரு போட்டியாளரை பற்றிய விவரம் தெரியவில்லை.