இன்று பல பேருக்கு இருக்கும் பிரச்சினை பணம்தான். பணம் இருந்தால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று நினைப்பவர்கள் இருக்கிறதான் செய்கிறார்கள், அதற்கு தகுந்தார் போல் இன்றைய விலைவாசி உயர்வும் நடுத்தர மக்களுக்கு வாழ்க்கை ஓட்டுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. அப்போது வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் நிலைமை பார்த்தால் வேதனையாக தான் இருக்கும். என்னதான் ஒரு சில வீட்டில் ஓடி ஓடி உழைத்தாலும் பணம் வருவது போல் இருந்தாலும் கையில் தாங்காமல் சென்று கொண்டே இருக்கும். ஒரு சில பேருக்கு பணம் வருவதற்கான வாய்ப்பு தடைப்பட்டு கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் என்ன செய்யலாம் சாஸ்திரங்கள் கூறுவது என்ன என்பதைப் பற்றி இனி காண்போம்.

நம் வீட்டில் பணம் வரவு அதிகரிக்கவும் வந்த பணம் கையில் தங்குவதற்கு ஒரு சில எளிய பரிகார முறைகளை நாம் கடைப்பிடித்தால் அது நல்ல பலன்களை தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஏனென்றால் பணம் இன்றைய காலகட்டத்தில் பல பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு கருவியாக இருந்து வருகிறது. பணம் ஒருவர் கையில் சரளமாக புழங்க வேண்டும் என்றால் வீட்டின் வடக்கு சுவரில் ஜன்னல் சேர்ந்து இருக்க வேண்டும். அது எப்போதும் திறந்து இருக்க வேண்டும். பணம் வைக்கும் பீரோவை தெற்கு திசையில் வைக்க வேண்டும். பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பணம் அதிகரிக்கும்.
ஒரு சிலர் பணத்தை பூஜை அறையில் வைத்து பயன்படுத்துவார்கள். அப்படி செய்யக்கூடாது ஏனென்றால் பணம் பலர் கைக்கு சென்று மாறி வருவதால் பூஜையறை தெய்வத்தன்மையுடன் இருப்பதால் அங்கு பணத்தை வைக்க வேண்டாம். உங்களுக்கு ஏதேனும் பணம் கிடைத்தால் அதை பூஜை அறையில் ஒரு ஐந்து நிமிடங்கள் 10 நிமிடங்கள் பூஜையின் போது வைத்து சாமி கும்பிட்டு விட்டு எடுத்து விடுங்கள். அதற்கு அடுத்ததாக பணத்தை பீரோவில் மரப்பட்டியில் வைத்து பயன்படுத்துவது பண வரவை அதிகரிக்கும்.
எதையும் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டதுதான் தேக்கு மரம். அதனால் தான் அதற்கு அந்த பெயர் ஏற்பட்டது. உங்களால் முடிந்தால் தேக்கு மரத்தில் சிறிய மரப்பெட்டியை செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அந்த மரப்பெட்டியில் பணத்தை சிவப்பு நிற துணியில் சுற்றி வைக்கும் போது அது பணவரவை அதிகப்படுத்தும். மேலும் பணம் வைத்திருக்கும் இடம் மணமாக இருக்க வேண்டும். அதனால் பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை பணம் வைக்கும் பெட்டியில் போட்டு வையுங்கள். மேலும் வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. அதனால் நாட்டு மருந்து கடைகளில் சிறிய துண்டு வசம்பை பணப்பெட்டியிலும் உங்கள் பர்ஸிலும் வைத்தால் அது பணத்தை ஈர்க்கும்.

சிலருக்கு வாஸ்து தோஷத்தினால் பணம் சேராமல் இருக்கும். கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு வழியில் சென்று கொண்டே இருக்கும். அப்படி நினைப்பவர்கள் வீட்டில் மயிலிறகை வைத்தால் செல்வம் பெருகும். பணம் நகை வைக்கும் பீரோவில் ஒரு மயிலிறகை வையுங்கள் மற்றும் செல்வம் அதிகரிக்கவும் வீட்டில் தங்கம் சேரவும் பூஜை அறையில் மகாலட்சுமியின் அருள் நிறைந்த பொருட்களான வலம்புரிச் சங்கு மற்றும் ஒரு கண்ணாடி வைத்து அதன் முன் ஒரு கிண்ணத்தில் காசு வைத்து அதை பூஜிக்கும்போது உங்களுக்கு பணம் வரவு ஏற்பட்டு வீட்டில் செல்வம் கொழிக்கும்.
