#image_title
பொதுவாக காலையில் சூரியன் உதிக்கும் போது சூரிய ஒளி நம் மீது பட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இதற்கு பின்னால் ஒரு அறிவியலே இருக்கிறது. ஜோதிட ரீதியாக பார்க்க போனால் சூரியன் ராஜ கிரகம் என்று கூறப்படுகிறது. சூரியனை வழிபடுவதால் உடல் நலம் மேம்படுதல், பணவரவு போன்றவை கிடைக்கும். எப்படி சூரியனை வழிபடுவது அதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி இனி காண்போம்.
சூரியனை முழு முதற் கடவுளாக போற்றி வணங்கும் பழக்கம் பண்டைய காலம் தொட்டு இருந்து வருகிறது. ஆனால் சூரியனை வணங்குவதற்கு சில சூட்சும விதிகள் உள்ளன. சூரிய நமஸ்காரம் ஆன்மீக வாழ்வுடனும் ஆரோக்கிய வாழ்வு உடன் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கியது. இது நோய் தீர்க்கும் ஒரு யோக பயிற்சியாகும்.
சூரியகதிர்கள் நம் மேல் பட்டால் லட்சுமி அருள் கிட்டும். காலையில் உதிக்கும் அருணோதயம் இளஞ்சூரிய கதிர்கள் நம் இரு உள்ளங்கைகளில் பட வேண்டும். சூரியனை பார்த்து இரு உள்ளங்கைகளையும் சிறிது நேரம் காண்பித்து அந்த கைகளை தலைக்கு மேல் கூப்பி ஒரு நிமிடம் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும்.
இப்படி மூன்று முறை சூரியனை அதிகாலையில் வெறும் வயிற்றில் வணங்கி விட்டு வழக்கமான பணிகளில் ஈடுபடலாம். இது தவிர சூரிய நமஸ்காரம் செய்யலாம். இதனால் கல்வி, செல்வம், ஞானம் போன்றவற்றை அருளுவார் சூரிய பகவான். சூரியனை தமிழ் மாத முதல் நாள், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் இந்த நாட்களிலும் பௌர்ணமி அமாவாசை ஆகிய தினங்களில் தண்ணீரில் நின்று சூரிய கதிர்களை கைகளால் நீட்டி பெற்றால் அது அற்புதமான செல்வ வளத்தையும் மங்காத புகழ் வளத்தையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.
உச்சி சூரியன் வரும் வேளையான மதியம் 12ல் இருந்து ஒரு மணி வரை ருத்ர வேளை ஆகும். இந்த நேரத்தில் சூரிய கதிர்கள் உங்கள் இரு உள்ளங்கைகளில் நேரடியாக படக்கூடாது. இது செல்வம் வற்றி கடன் பட வைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சூரியனை வணங்கும்போது சூரிய தேவனின் மந்திரம் அல்லது காயத்ரியை சொல்லி வழிபடுவது சிறப்பு.
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…
சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…