விஜய் மகனுக்கு கைவிரித்த LYCA.. பேரனுக்காக இறங்கிவந்த ஜேசன் சஞ்சயின் தாத்தா..

By Ranjith Kumar on மாசி 16, 2024

Spread the love

சில நாட்களுக்கு முன்னால் விஜயின் மகனான சஞ்சய் அவர்கள் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது அப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் வெளியிடுவதாக சஞ்சையும் லைக்கா நிறுவனமும் இணைந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வந்து கொண்டிருந்தது அதை கண்ட ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தார்கள்.

 

   

ஆனால் தற்போது சஞ்சய் உடன் இணையும் லைகா அவர்கள் புரொடக்ஷனில் தயாராகும் அப்படம் நடக்குமா நடக்காதா என்று கேள்விக்குறியாக இருக்கிறது லைக்கா நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட சில படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சில படங்களில் பண நஷ்டங்கள் ஆகிக் கொண்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது, ஆதலால் இப்படத்தில் லைக்காவால் தயாரிப்புக்கு பணம் கொடுக்க முடியாது என்று யூகிக்க முடிகிறது, மகிழ்்தெருமேனி இயக்கம் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திற்கும் லைக்கா தான் படத்தை தயாரித்து வருகிறது, அப்பாடத்திலும் சரியான அப்டேட்டும் இல்லை அப்படத்திற்கான பட்ஜெட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் படத்தின் படப்பிடிப்பு அப்போது நிறுத்தி வைக்கப்பட்டு பணம் தயாராகும் நிலையில் படத்தை மீண்டும் துவங்கி படத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

   

 

 

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்திலும் சரியான வரவேற்பு இல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குருகுலைந்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரஜினியின் நடித்து வரும் வேட்டையின் படத்திற்கான செட் அமைக்கும் விஷயத்தில் பண பிரச்சினை இருப்பதால் ரஜினி அவர்களை படப்பிடிப்பு தளத்திலிருந்து தற்போது வெளியேறி இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது, லைக்கா நிறுவனத்தின் பட்ஜெட்டில் பல பிரச்சினைகள் இருப்பதால் விஜயின் மகன் சஞ்சய் அவர்கள் இயக்கி வரும் படத்திற்கு சரியான பணம் தர முடியாது என்று தெரிகிறது.

இதற்காக சஞ்சயின் அம்மாவழி தாத்தாவான சொர்ணலிங்கம் அவர்கள் சஞ்சயின் படப்பிடிப்பிற்கு பணம் ஒதுக்குவதாக கூறி இருக்கிறார், இவர் இலங்கையில் குடிபெயர்ந்து அங்கு பல தொழில்களை செய்து லண்டனிலும் பல பிசினஸில் செய்து வருகிறார் அதில் பெட்ரோல் பங்க், நகை கடை என்று பல பெரிய பெரிய தொழில்கள் செய்து வருகிறார், இவரும் ஒரு மிகப்பெரிய ஒரு தொழில் அதிபர் தான். ஆதலால் லைக்கா நிறுவனம் தரப்பிலிருந்து பணம் அளிக்க முடியாதனால் தன் பேரனுக்காக முன்வந்து படத்தை முடித்து தருவதற்காக பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது, ஆக மொத்தத்தில் தன் பேரனை காப்பாற்ற தாத்தா களமிறங்கி இருக்கிறார் என்று ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.