Siren

சத்தமா..? நிசப்தமா..? ஜெயம் ரவியின் ‘சைரன்’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..

By admin on மாசி 16, 2024

Spread the love

கட்டாயம் எப்படியும் ஒரு வெற்றி கொடுத்தாக வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு ஜெயம் ரவி நடித்த படம் சைரன். இன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி பல கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்திற்குப் பின் ஜெயம் ரவி நடித்த வெளியான அகிலன், இறைவன் போன்ற படங்கள் மண்ணைக் கவ்வ இந்த முறை கனமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஜெயம் ரவி. விஸ்வாசம், சர்தார் போன்ற படங்களுக்கு கதையாசிரியராகத் தகிழ்ந்த அந்தோனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளிவந்துள்ளது சைரன் படம்.

   

ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  செய்யாத ஜெயிலில் இருக்கும் ஒரு கைதி பரோலில் வெளிவந்து எதிரிகளைப் பழிவாங்கும் கதைதான். தமிழ் சினிமாவிற்கு இந்த கதைக்களம் புதிது என்பதால் இயக்குநருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

   

ஜெயம் ரவி நடுத்தர வயது ஆளாக திரையில் மின்னுகிறார். தந்தை மகள் பாசத்தில் விஸ்வாசம் படத்தை நினைவுப் படுத்துகிறார் இயக்குநர். ஜெயம் ரவிக்கு தோள் கொடுக்கும் போலீசாக வந்து மிரட்டுகிறார் கீர்த்தி சுரேஷ். அனுபமா சில காட்சிகளே வந்தாலும் இவர்களுக்குள் ஜோடிப் பொருத்தம் அவ்வளவாக ஒத்துப் போகவில்லை. இருப்பினும் சென்டிமென்ட், பாசம் என தமிழ் சினிமாவிற்கு பழக்கப்பட்ட கதையில் சைரனை அலற விட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் அந்தோனி பாக்யராஜ்.

 

இந்தப்படம் பற்றி ரசிகர்களின் டிவிட்டர் விமர்சனங்களைப் பார்ப்போம்.

படத்தின் முதல் பாதி தொய்வில்லாமல் போகிறது எனவும், சண்டைக் காட்சிகள் அற்புதமாக உள்ளது எனவும், ஜெயில் போன்ற இடங்களில் கலை இயக்குநரின் உழைப்பு தெரிகிறது எனவும் கூறியுள்ளார் ரசிகர் ஒருவர்.

Siren

#image_title

இந்தப் படத்தை எதிர்பார்த்துச் செல்வோருக்கு கண்டிப்பாக பிடிக்கும் எனவும், ஜெயம் ரவியின் கதாபாத்திரமும், நடிப்பும் அழகாக உள்ளது எனவும் பகிர்ந்துள்ளார் மற்றொரு ரசிகர்.

Siren 4

#image_title

ஜெயம் ரவியின் நடுத்தர வயதுத் தோற்றம் அழகாக உள்ளது எனவும், கீர்த்தி சுரேஷின் போலீஸ் கதாபாத்திரம் நன்றாக உள்ளது எனவும், அனுபமாவின் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம் எனவும் மற்றொருவர் கூறியுள்ளார்.

Siren 5

#image_title

ஜெயம் ரவியின் இரட்டைக் கதாபாத்திரம் நன்றாக உள்ளது எனவும், கீர்த்தி சுரேஷ் நடிப்பும் நன்றாக உள்ளது எனவும் மொத்தத்தில் ஆக்சன் திரில்லராக படம் நன்றாக உள்ளது என பதிவிட்டுள்ளார் மற்றொருவர்.

Siren 6

#image_title

இந்தப்படத்திற்கு நம் ரேட்டிங் : 4.5