தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ஹீரோவாக வளர்ந்து நிற்கும் நடிகர்தான் ஸ்ரீராம். ஸ்ரீராம் நடராஜன் என்பதுதான் இவருடைய முழு பெயர். சினிமாவுக்காக ஸ்ரீ என வைத்துக்கொண்டார். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் இவருடைய நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அந்தத் தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இதனை தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18 /9 திரைப்படம் தான் இவர் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவருக்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சோன்பப்படி, வில்லம்பு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் வில்லம்பு திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து பெயர் வாங்கிக் கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படத்திலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக ஸ்ரீ நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் நான்கு நாட்களிலேயே தாக்குப் பிடிக்க முடியாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். கடந்த 2003 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான இறுக்கப்பற்று என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவருடைய நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் ஆகும். அதன் பிறகு ஸ்ரீ நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை.

இப்படியான நிலையில் நடிகர் ஸ்ரீயின் நெருங்கிய தோழி டோட்டி டேவிட் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஸ்ரீ என்னோட நீண்ட கால நண்பர். அவர் நடிகர் ஆவதற்கு முன்பு முதலில் மிமிக்ரி ஆர்டிஸ்ட். கலக்கப்போவது யாரு சீசனில் சிவகார்த்திகேயன் எல்லோரும் இருந்த சீசனில் நானும் அவனும் சேர்ந்து பண்ணோம். ஸ்ரீ ரொம்ப திறமையானவர். அவன் இருந்தாலே அந்த இடம் எப்போதும் கலகலப்பாக தான் இருக்கும். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்தான். அதன் பிறகு அவன் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தான். முதலில் எல்லோரும் சேர்ந்து தான் வெளியே செல்வோம். பிறகு எங்களுடன் வருவதையே அவன் நிறுத்தி விட்டான். ஆனா அடிக்கடி வீட்டுக்கு மட்டும் வருவான். அவன் பேசவில்லை என்றால் நாங்கள் கோபப்பட மாட்டோம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட மைண்டு லெவல் ஒரு மாதிரியாகி வெளியே வந்துட்டான். அதன் பிறகு அவனுக்கு என்னதான் நடக்குது திடீரென்று மனசு சரியில்லை என்று சொல்றாங்களே என்று பார்த்தேன். அவனை என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவன் டிப்ரஷனுக்கு மருந்து சாப்பிடுவதாக எனக்கு என் தோழி மூலமாக தகவல் கிடைத்தது. அது கொஞ்சம் அதிகமான டிப்ரஷன். மெண்டலியா ரொம்பவே பாதித்தது. அவனுடைய ஒவ்வொரு படமும் பேசக்கூடிய திரைப்படம் தான். அவன் முதலில் இயக்குனராக தான் விரும்பினார். மாநகரம் படத்திற்குப் பிறகு அவன் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணா. ஆனா இடையில் எங்களுக்கு போன் பண்ணி வேலை வாங்கி கொடுங்கன்னு கேட்டான். வில் அம்பு படத்தில் தயாரிப்பாளர் சொன்னது ஸ்ரீக்கு பேமெண்ட் தரவில்லை என்று. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவனுக்கு பேமென்ட் கொடுக்கல.

ஒரு கட்டத்தில் பொங்கல் கிண்டுன ஸ்ரீயை யாருமே கண்டுக்கல. இன்னைக்கு சட்டையை கழட்டி ஆபாசமா இருக்கான் என்றதும் மட்டும் காட்டுகிறார்கள். ஏன் அப்பாவே அவனை ப்ரொமோட் பண்ணி இருக்கலாமே. இன்னைக்கு நல்ல நடிகர் என்று சொல்றோம். ஆனா அவனை ஒரு வருடமாக கண்டுக்காம தான் எல்லோரும் இருந்திருக்கும். மாநகரம் படத்துல நடிச்சவரு பொங்கல் கிண்டிகிட்டே இருக்கார் என்று சொல்லி இருக்கலாம். அப்பவே மிஸ்கினையும் லோகேஷையும் காப்பாத்துங்கன்னு கேட்டு இருக்கலாமே. இன்னைக்கு அவன் நிலைமை இந்த அளவுக்கு மோசமானதுக்கு அப்புறம் மட்டும் ஏன் வெளியே வருது. இதுதான் உங்களின் மனிதாபிமானமா என்று ஸ்ரீயின் தோழி காட்டமாக பேசியுள்ளார்.
