அஜித்திடம் அந்த விஷயத்தைக் கணிக்கவே முடியாது… VP பகிர்ந்த தகவல் – இது புலம்பலா இல்ல பாராட்டா?

By vinoth on சித்திரை 15, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றுள்ள வசூல் மன்னன்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் அஜித். அமராவதியில் ஆரம்பித்த அவரின் திரைப் பயணம் இன்று விடாமுயற்சியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதலில் காதல் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தீனா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார்.

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். இடையில் அவர் சில் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். தன்னோடு இணைந்து நடித்த நடிகை ஹீராவை அவர் காதலித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சேர்ந்து சுத்துவதாகவும் கிசுகிசுக்கள் அப்போது பரவின. இதை இருவருமே மறுக்கவில்லை.

   

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் பிரிந்தது. இதனால் சில ஆண்டுகள் அஜித் சினிமாவில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்தார். அப்போது அமர்க்களம் நடித்த போது ஷாலினி மீது அஜித் காதல் வசப்பட்டு அவரிடம் ப்ரபோஸ் செய்தார். ஷாலினியும் அவர் குடும்பமும் சம்மதித்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார். தற்போது சினிமா மற்றும் கார் ரேஸ் ஆகியவற்றில் அஜித் கவனம் செலுத்தி வருகிறார். அவரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸாகி சூப்பர் வசூலைப் பெற்று வருகிறது.

   

 

அஜித்துக்கு மங்காத்தா என்ற சூப்பர் டூப்பர் ஹிட்டைக் கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்துடன் அதன் பிறகு இணைந்து பணியாற்றவே இல்லை. அதற்குக் காரணம் அஜித்துக்கு வெங்கட் பிரபு மேல் இருக்கும் மன வருத்தம்தான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித்துடன் மீண்டும் பணியாற்றுவது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு பேசியுள்ளார். அதில் “அஜித் ரசிகர்கள் மங்காத்தா 2 பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். எனக்கும் அந்த ஆசை உள்ளது. ஆனால் மங்காத்தா 2 இல்லாமல் வேறு கதையை அஜித் சாரிடம் சொல்லி அதைப் பண்ணலாமா என்ற எண்ணமும் உள்ளது. ஆனால் அஜித் சார் எப்படி ஒரு இயக்குனரைத் தேர்வு செய்வார் என்பதைக் கணிக்கவே முடியாது.” எனக் கூறியுள்ளார்.