மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் ஷகீலா. தமிழில் விஜய் படங்களில் ஒரு விஷ்ணு படத்தில் நடனமாடியுள்ளார். பிறகு கவுண்டமணியுடன் காமெடி காட்சிகளில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியவில்லை. இதனால் ரூட்டை மாற்றிய சகிலா மலையாளத்தில் கவர்ச்சி படங்களில் நடிக்க தொடங்கினார். 90 கால கட்டங்களில் இவர் படங்கள் ரிலீஸ் ஆனால் பெரிய மம்முட்டி மற்றும் மோகன்லால் படங்களுக்கு இல்லாத வரவேற்பு இவருக்கு கிடைக்கும்.

சூப்பர் ஸ்டார்களை நடுங்க வைத்தவர் தான் சகிலா. அவர் படங்கள் மலையாள மொழிகளில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் பிறகு தனது ரூட்டை மாற்றிக்கொண்ட ஷகிலா தமிழில் ஜெயம், பாஸ் என்கிற பாஸ்கரன், அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகை ஆக தெரிந்த ஷகிலா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

தற்போது பல பிரபலங்களை இன்டர்வியூ எடுத்து வரும் சகிலா சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் முதலில் மலையாள படங்களில் நடிக்கும் போது மூட்டை மூட்டையாக பணம் வரும். அந்த பணத்தை எல்லாம் எடுத்து வைப்பதற்காகவே நிறைய இடங்களில் லாக்கர் வைத்திருந்தேன். அந்த சமயத்தில் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு லட்சம் வரை சம்பாதிப்பேன். பணப்புழக்கம் நிறைய இருந்தது சொந்தங்களும் கூடியிருந்தனர். அப்போது நிறைய பணம் இருந்தது. பணம் எப்போது வரும் போகும் என்று யாருக்கும் தெரியாது. இப்போ அந்த பணம் எதுவும் இல்லை என்று ஷகிலா அந்த பேட்டியில் பேசியுள்ளார். பலருக்கும் உதவி வரும் நடிகை ஷகீலா, தன்னுடைய உறவினர்களால் அவமானப்படுத்தப்பட்டதை வருத்தத்துடன் கூறிஉள்ளார்.
