தமிழ் சினிமாவில் ஒரு தனியொருப் பல்கலைக்கழகமாக விளங்குபவர் கமல்ஹாசன், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, பாடல் மற்றும் நடனம் என தொடாத துறைகளே இல்லை என சொல்லலாம். தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
இன்று உலக நாயகனாக அனைவராலும் கொண்டாடப்படும் கமல்ஹாசன் முதன் முதலில் நடித்தது களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் தான். அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். 1960 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் ஜெமினி கணேசன் சாவித்திரி நடிப்பில் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு பாராட்டப்பட்டது.
இந்த திரைப்படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த நிலையில் படத்தில் நடித்த நடிகர்களை திரையரங்குக்கு அழைத்துச் சென்று வெற்றி விழா கொண்டாடிய நிறுவனம் முடிவு செய்தது. அதற்கான வேலைகளும் நடந்த போது விழாவில் படத்தின் நாயகன் ஆன ஜெமினி கணேசனுக்கு முக்கியத்துவம் தராமல் குழந்தை நட்சத்திரமான கமல்ஹாசனுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஜெமினி கணேசன் அப்செட் ஆகிவிட்டார்.
அதே சமயம் படப்பிடிப்பில் ஒரு காட்சியில் சாவித்திரி கமலுக்கு உப்புமா ஊட்டி விட அதனை கமல் சாப்பிட மறுத்துவிட்டாராம். அங்கிருந்து அனைவரும் கமலை சாப்பிட சொல்ல அவர் சாப்பிடவே இல்லையா. அதன் பிறகு உதவி இயக்குனர் எஸ் பி முத்துராமன் கமலை தனியாக அழைத்துச் சென்று ஏன் உப்புமா சாப்பிட மறுக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு கமல் ஷூட்டிங் எடுத்த போது மாங்காய் பறிக்கிற சீனில் மாங்காய் இருந்தும் அது உண்மையான மாங்காய் இல்லை.
அங்கு இருக்க புடவை கூட உண்மையான புடவை கிடையாது. இந்த உப்புமா மட்டும் எப்படி உண்மையான உப்புமாவாக இருக்கும் என்று கமல் கேட்டுள்ளார். இதைக் கேட்டு சிரித்த எஸ் பி முத்துராமன் நல்ல உப்புமா தான் நாங்க எல்லாம் சாப்பிட்டு காட்டறோம் என்று சொல்லி கமலை சமாதானப்படுத்தி அந்த காட்சியில் உப்புமா சாப்பிட வைத்து நடிக்க வைத்துள்ளனர்.