சமீப காலமாக தெரு நாய்களின் விவகாரம் பெரும்பேசும் பொருளாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீயா நானா நிகழ்ச்சியில் விவாதித்த பொழுது, அது பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அம்மு தெருநாய்களுக்கு ஆதரவாக பேசி இணையவாசிகளின் எதிர்ப்பை பெற்று வருகிறார்.
சமீபத்தில் நடிகை அம்மு, பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், தெரு நாய்கள் உண்மையில் நான்கு கால் இருக்கக்கூடிய குழந்தைகள். தெருவில் இருக்க வேண்டும் என்பது அவர்கள் தலைவிதி அல்ல. ஆனால் அவர்கள் தெருவில் இருக்க வேண்டும் என்ற சூழல் ஏற்படுத்துவிட்டது. 100 நாய்களில் 5 நாய்கள் ஆக்ரோஷமாகவும், வெறித்தனமாகவும் இருக்கலாம். அந்த குறிப்பிட்ட நாய்களை அடையாளம் கண்டு, நடவடிக்கை மேற்கொண்டால் இந்த பிரச்சனை சரியாகிவிடும். எல்லா தெரு நாய்களையும் கூண்டில் அடைத்தால் பலமான நாய் பலவீனமான நாய்களை தாக்கும், வயதான நாய்களை தாக்கும், நோய்வாய்ப்பட்ட நாய்களும் தாக்கப்படுவன என்று கூறினார்.
மேலும் குழந்தைகளை நாய் கடிக்கும் பொழுது அவர்களின் பெற்றோர் எங்கே போனார்கள்? அக்கம் பக்கத்தினர் எங்கே போனார்கள்? நாய்களை மட்டும் குறை கூறுவது சரியா? தண்டனை கைதிகளுக்கு கூட கடைசி ஆசை என்ன என்று கேட்பார்கள், ஆனால் நாய்களுக்கு அது கூட கேட்கப்படுவதில்லை. மனிதாபிமானமற்ற மனிதர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு பதிலாக, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்குமா? அதே போல் தான், ஆக்ரோஷமான நாய்களை மட்டும் கூண்டில் அடைக்காமல், அனைத்து நாய்களையும் கூண்டில் அடைப்பது சரியானதா? என்று பேசினார்.
இவரது பேட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பல இணையவாசிகள் பலவிதமான எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…