குழந்தையை நாய் கடிக்குற வரை பெற்றோர்கள் எங்கே போறாங்க….? நாய் என்ன தப்பு பண்ணுச்சி… பொதுமக்களை கொந்தளிக்க வைத்த நடிகை அம்மு…..!

By Srimathi on புரட்டாதி 1, 2025

Spread the love

சமீப காலமாக தெரு நாய்களின் விவகாரம் பெரும்பேசும் பொருளாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீயா நானா நிகழ்ச்சியில் விவாதித்த பொழுது, அது பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அம்மு தெருநாய்களுக்கு ஆதரவாக பேசி இணையவாசிகளின் எதிர்ப்பை பெற்று வருகிறார்.

சமீபத்தில் நடிகை அம்மு, பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், தெரு நாய்கள் உண்மையில் நான்கு கால் இருக்கக்கூடிய குழந்தைகள். தெருவில் இருக்க வேண்டும் என்பது அவர்கள் தலைவிதி அல்ல. ஆனால் அவர்கள் தெருவில் இருக்க வேண்டும் என்ற சூழல் ஏற்படுத்துவிட்டது. 100 நாய்களில் 5 நாய்கள் ஆக்ரோஷமாகவும், வெறித்தனமாகவும் இருக்கலாம். அந்த குறிப்பிட்ட நாய்களை அடையாளம் கண்டு, நடவடிக்கை மேற்கொண்டால் இந்த பிரச்சனை சரியாகிவிடும். எல்லா தெரு நாய்களையும் கூண்டில் அடைத்தால் பலமான  நாய் பலவீனமான நாய்களை தாக்கும், வயதான நாய்களை தாக்கும், நோய்வாய்ப்பட்ட நாய்களும் தாக்கப்படுவன என்று கூறினார்.

   

மேலும் குழந்தைகளை நாய் கடிக்கும் பொழுது அவர்களின் பெற்றோர் எங்கே போனார்கள்? அக்கம் பக்கத்தினர் எங்கே போனார்கள்? நாய்களை மட்டும் குறை கூறுவது சரியா? தண்டனை கைதிகளுக்கு கூட கடைசி ஆசை என்ன என்று கேட்பார்கள், ஆனால் நாய்களுக்கு அது கூட கேட்கப்படுவதில்லை. மனிதாபிமானமற்ற மனிதர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு பதிலாக, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்குமா? அதே போல் தான், ஆக்ரோஷமான நாய்களை மட்டும் கூண்டில் அடைக்காமல், அனைத்து நாய்களையும் கூண்டில் அடைப்பது சரியானதா? என்று பேசினார்.

   

இவரது பேட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பல இணையவாசிகள் பலவிதமான எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.