நோய்களை தீர்க்கும் தன்வந்திரி விரதம்… எப்போது எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா…?

Spread the love

பிரார்த்தனைகள் போதோ கோயிலுக்கு செல்லும் போதோ நாம் அனைவரும் முதலில் வேண்டுவது நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால் நோய் நொடி இல்லாமல் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்தாலே அதுவே மிகப்பெரிய வரம் அதுவே மிகப்பெரிய சேமிப்பு ஆகும். இந்து மத தெய்வங்களில் நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு அருள் புரியவும் கடவுளாக இருப்பது தன்வந்திரி பகவான் தான். இந்த தன்வந்திரி பகவானுக்கு விரதம் இருப்பது எப்படி பூஜை முறைகள் எப்படி என்பதை பற்றி இனி காண்போம்.

மகா கடவுள் ஆன திருமால் எடுத்த அவதாரங்கள் மொத்தம் 24 ஆகும். அதில் மிக முக்கியமான 10 அவதாரங்களை தான் நாம் தசாவதாரம் என்று கூறி வழிபடுகிறோம். இந்த 24 அவதாரங்களில் 17 ஆவதாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் தன்வந்திரி அவதாரம். திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும்போது அதில் ஒவ்வொரு பொருளாக வெளியே வந்தது. கற்பகவிருட்சம் ஐராவதம் என்ற யானை உள்ளிட்ட புனிதமான பொருட்கள் வெளிவந்தன. இறுதியாக திருமாலே தன்வந்திரியாக அவதரித்து அமிர்த கலசத்தை கையில் கொண்டு வந்தார். அதுதான் இந்த தன்வந்திரி அவதாரம் ஆகும்.

இவரை ஆயுர்வேதத்தின் கடவுளாகவும் வைத்தியராஜா எனவும் ஆதர்ஷ மருத்துவர் எனவும் அனைத்து நோய்களை தீர்க்கக் கூடியவர் என்று புராணங்களில் கூறப்படுகிறது. நோய்களை தீர்க்கும் வல்லமை கொண்ட தன்வந்திரி பகவானின் விரதம் மிகவும் சக்தி வாய்ந்த விரத முறை என்று கூறப்படுகிறது. மாதம்தோறும் வரும் தேய்பிறை திரயோதசி தன்வந்திரி பகவான் விரதம் இருந்து வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும்.

இது மட்டுமல்லாமல் ஐப்பசி மாதத்தில் வருகிற தேய்பிறை திரையோதசி தினமும் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த வருடம் தன்வந்திரி விரதம் அக்டோபர் 30ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. அதாவது ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் முந்தைய தினம் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த தன்வந்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு ஒரிரு நாட்கள் முன்பாக வருவதால் தன்வந்திரி அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டவராகதால் அன்றைய தினம் அவரை விரதம் இருந்து வழிபட்டு தீபாவளிக்கு லேகியம் செய்யும் பழக்கமும் உண்டானது.

தன்வந்திரி விரதம் அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நான்கு முதல் ஆறு மணிக்குள் எழுந்து குளித்துவிட்டு தன்வந்திரி பகவான் படத்திற்கு முன்பு பித்தளை சொம்பில் நீர் வைக்க வேண்டும். அந்த சொம்பு தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை போட்டு சொம்பின் வாய்பகுதியை கையால் மூடிக்கொண்டு 1008 முறை தன்வந்திரி பகவான் மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். பிறகு தீபம் ஏற்றி சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் வைத்து தன்வந்திரி பகவான் படத்திற்கு முன்பு நோயில்லாத வாழ்க்கை தர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

இந்த தன்வந்திரி விரதத்தை மாதம் தோறும் வரும் தேய்பிறை பிரயோதாசி அன்று கடைப்பிடித்து வரும்போது தீராத மற்றும் நாள்பட்ட வியாதியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை கண்கூடாக பார்க்க முடியும். இந்த ஒரு விரதமுறையை நாம் மேற்கொள்ளும்போது முழு நம்பிக்கையை வைத்து அதை தொடங்க வேண்டும். அதனால் நீங்கள் நோயினால் பாதிக்கப்பட்டு அது சரியாக வேண்டும் என்று விரும்பினால் முதலில் தன்வந்திரியை கடவுளை வணங்கி விரதம் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு பலன் கிடைக்கும்.

admin

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

1 மணத்தியாலம் ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

1 மணத்தியாலம் ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

1 மணத்தியாலம் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

1 மணத்தியாலம் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

2 மணத்தியாலங்கள் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

2 மணத்தியாலங்கள் ago