லவ்லி புரொஃபெஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU) சனிக்கிழமை இரவு பரவிய வதந்தியைத் தொடர்ந்து பெரும் பரபரப்பும் போராட்டமும் ஏற்பட்டது. மாணவிகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய சரிபார்க்கப்படாத பாலியல் வன்கொடுமை குறித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் திரண்ட மாணவர்கள் வளாகப் பொருட்களைச் சேதப்படுத்தியதோடு, ஜலந்தர்-பக்வாரா நெடுஞ்சாலையையும் மறித்து முழக்கங்களை எழுப்பியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கபூர்தலா எஸ்பி கௌரவ் தூரா தெரிவிக்கையில், இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வப் புகாரும் வரவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத் துறை அருகே மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்தபோதிலும், அதற்கும் இந்த பாலியல் வன்கொடுமை வதந்திக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் காவல்துறை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் எனத் தெரிவித்துள்ள காவல்துறை, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து நெடுஞ்சாலைப் போக்குவரத்தைச் சீர்செய்துள்ளது. மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகமும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில், 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்ற…
திருமணமாகி எட்டு மாதங்களே ஆன நிலையில், இரண்டரை மாத கர்ப்பிணியாக இருந்த 24 வயதான பிரியங்கா, கடந்த செப்டம்பர் 19…
சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகமைந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் குமாரசாமி - பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.…
மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமனை ஆதரித்து அச்சரப்பாக்கத்தில் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
மதுராந்தகத்தில் இன்று நடைபெறவுள்ள 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி' பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்காமல் கூட்டணி கட்சி…
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள இருவேறு பார்வைகளும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட…