உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு whatsappல் தினம் தோறும் ஏராளமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது whatsapp பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
தனது யூசர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள whatsapp புது அப்டேட் வழங்கி வரும் நிலையில் தற்போது X மற்றும் பேஸ்புக்கில் Cover photo வைப்பது போலவே whatsappலும் இனி Cover போட்டோ வைக்கும் வசதி அறிமுகமாக உள்ளது. முதல் கட்டமாக Beta வெர்ஷனில் பிசினஸ் அக்கவுண்டுகளுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. விரைவில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
