BREAKING: நள்ளிரவில் விஜய்க்கு வந்த அதிர்ச்சி…. யாரும் எதிர்பார்க்காத சம்பவம்….!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல் விஜய் காலதாமதம் செய்து வந்த நிலையில் நேற்று மாமல்லபுரத்திற்கு வரவழைத்து அனைத்து குடும்பத்தினரையும் சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். அது மட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவை மொத்தமாக ஏற்றுக் கொள்வதாக விஜய் உறுதி அளித்திருந்தார். இந்த சந்திப்புக்கு முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வங்கி கணக்கில் விஜய் வரவு வைத்தார்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரமேஷின் மனைவி 20 லட்சத்தை திருப்பி அனுப்பியது விஜய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சங்கவி, தங்களுக்கு பணம் முக்கியமில்லை விஜய் நேரில் வந்து ஆறுதல் கூறாதது மன உளைச்சலை தருகிறது என கூறினார். தங்கள் சார்பாக சிலர் போலியாக சென்று விஜயை சந்தித்ததாகவும் அதனால் அவர்களின் பணத்தை RTGS மூலமாக திருப்பி அனுப்பி விட்டேன் என்றும் ஆவேசமாக அவர் பேசியுள்ளார். இது விஜய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.