“பேருக்குத்தான் பிக்பாஸ் ஷோ…. ஆனா…? எப்போ தான் மாறுவீங்க…?” நடிகை அன்சு ரெட்டி காட்டம்…!!

By Devi Ramu on ஐப்பசி 28, 2025

Spread the love

தெலுங்கு சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அன்சு ரெட்டி. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் அன்சு ரெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறியதாவது, பேருக்குத்தான் தெலுங்கு பிக் பாஸ் ஷோ. ஆனால் தெலுங்கு சரியாக பேசத் தெரியாத தெலுங்கு அல்லாத நடிகர்களை சேர்க்கிறார்கள். அது ஏன்? என்பது எனக்கு தெரியவில்லை. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெலுங்கு பேசுவது அடிப்படை அளவுகோல்.

பிக் பாஸில் சேர விரும்பும் பல தெலுங்கு நடிகர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. மற்ற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. அங்கு எத்தனை தெலுங்கு நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது? எப்போது தான் மாறுவீர்கள்? என காட்டமாக பேசியுள்ளார். அன்சு ரெட்டிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.