என்ன இப்படி சொல்லிட்டாங்க..? விஷால் உடல்நிலை குறித்த கேள்விக்கு ஷாக் பதில் கொடுத்த வரலக்ஷ்மி..!

By Soundarya on ஜனவரி 9, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரின் மகள் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகையாக களமிறங்கியவர் நடிகை வரலக்ஷ்மி. இவர் திரையுலகில்  ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்

   

. அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷாலுடன் இணைந்து ‘சண்டக்கோழி’, விஜயுடன் இணைந்து ‘சர்கார்’, சசிகுமார் உடன் இணைந்து ‘தாரை தப்பட்டை’ போன்றவர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதை தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

 

தற்போது விஷால் படத்தின் மதகஜராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது நடிகர் விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய விஷால் கை, நடுக்கத்துடன் காணப்பட்டார். கண்ணெல்லாம் சிவந்து காணப்பட்டார்.

இதனால் அவருக்கு வைரல் காய்ச்சல் என்றும் மருத்துவமனை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் விஷால் குறித்து  வரலக்ஷ்மியிடம் விஷாலுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் எனக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியாது. ஆனால் பாக்கும்போது ரொம்ப பாவமா இருந்துச்சி. இந்த படத்துல ரொம்ப hardwork பண்ணுனாரு. சீக்கிரமா சரியாகி வருவாருன்னு நம்புறேன்” என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.