அஜித் உடல் எடையை குறைந்தது இப்படி தான்..? வியக்க வைக்கும் தகவலை சொன்ன பிரபலம்..!

By Soundarya on ஜனவரி 9, 2025

Spread the love

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார். மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்க அனிருத் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையில் விடாமுயற்சி ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதால் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.  இதற்கிடையில் நடிகர் அஜித் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் பைக் ட்ரிப் சென்று வந்தார்.

   

மேலும் இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல் மற்றும் பைக் ரேஸ் சொல்லிட்டா பல விளையாட்டு தொடர்பான செயல்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.அடிக்கடி தனது பைக்கில் சுற்றுலா என்ற பெயரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட நேபாளம் நாட்டிற்கு உலக டூர் சுற்றுலா சென்று இருந்தார்.

   

 

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தன்னுடைய முழு உழைப்பை போடும் விதமாக அஜித் உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தியாக பரவி வருகிறது. அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக உடல் எடையை குறைத்து வாலி படத்தில் வரும் அஜித் போல மாறியுள்ளார். கிட்டத்தட்ட 15 கிலோ உடல் எடை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி இதுகுறித்து பேசுகையில், “அஜித்தின் உடல் எடை குறைத்த விஷயம் குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது. என்னால் அதை 50% தான் நம்ப முடிகிறது. அதாவது 90 நாட்களுக்கு வெறும் வெந்நீர் மட்டுமே குடித்தாராம். இடையில் புரோட்டீன்  மற்றும் சில மாத்திரைகள் மட்டுமே எடுத்துக்கொண்டாராம். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இதை யாரும் முயற்சிக்க வேண்டாம” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.