35 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாத தமிழ் நடிகர்கள்… 56 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் SJ சூர்யா…

By admin on தை 9, 2025

Spread the love

சினிமாவில் நடிகர் நடிகைகள் தங்களது மார்க்கெட் குறைந்து விடக்கூடாது என்பதற்காக திருமணத்தை தள்ளிப் போடுவார்கள். ஆனால் ஒரு ஐந்து வருடம் 10 வருடம் அவர்களின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது நன்றாக நடித்து சம்பாதித்து விட்டு ஒரு குறிப்பிட்ட வயது 30 அல்லது 35 தாண்டிய பிறகு திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் அந்த ட்ரெண்ட் இப்போது மாறி இருக்கிறது. எல்லா நடிகர் நடிகைகளும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற முடிவில் திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிக்கின்றனர். ஆனால் ஒரு சில நடிகர்கள் திருமணத்தை தள்ளி போடும்போது அவர்களால் இறுதி வரை திருமணம் செய்து கொள்ள முடியாமலேயே போகிறது. அப்படி 35 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத தமிழ் நடிகர்களை பற்றி இனி காண்போம்.

   

1.SJ சூர்யா : தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக பமொழிகளிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் SJ சூர்யா. 1999 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து வாலி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் அறிமுகமானார். ஆனால் அதே நேரத்தில் நடிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தார். சமீபத்திய வருடங்களில் இவரின் நடிப்பிற்கு அதிக வரவேற்பு கிடைப்பதால் நடிப்பில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 56 வயதாகும் SJ சூர்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

   

2. விஷால்: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷால். இவரது தந்தை ஜிகே ரெட்டி திரைப்பட தயாரிப்பாளர். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு விஷாலுக்கு கிடைத்தது. தொடர்ந்து பல ஆக்சன் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் விஷால். இவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கல்க்கு ரிலீஸாக இருக்கிறது. அப்படத்தின் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்ட இவர் உடல்நலம் சரியில்லாமல் இருப்பது பல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 47 வயதாகும் விஷாலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்தம் வரை சென்று அது நின்று விட்டது. இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

 

3.வினய்ராய் : தமிழ் சினிமாவில் ன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விய் ராய். அதைத்தொடர்ந்து ஜெயம் கொண்டான், அரண்மனை பாகம் ஒன்று, துப்பறிவாளன், போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் விய் ராய். தற்போது 45 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

4. சிம்பு: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. அவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர். இவரது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு. 2002 காலகட்டத்தில் நாயகனாக அறிமுகமாகி காதல் அழிவதில்லை, வல்லவன், கோவில், சரவணா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் சிம்பு. 41 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

5. ஜெய்: சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜெய். இவர் இசையமைப்பாளர் தேவாவின் தங்கை மகன் ஆவார். சுப்பிரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் ஜெய். 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

6.அதர்வா முரளி: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்த முரளி அவர்களின் மகன் தான் அதர்வா முரளி. பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான அதர்வா முரளி முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, சண்டிவீரன், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 36 வயதாகும் அதர்வா முரளி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.