தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.

இவருடைய இயக்கத்தில் இறுதியாக விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளியான விடுதலை 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இப்படியான நிலையில் இயக்குனராகவும் கனவுகளோடு வரும் வாய்ப்புகள் கிடைக்கப்பெறாத எளிய மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக 100% உதவி தொகையுடன் திரை கல்வியில் இளங்கலை படிக்க வெற்றிமாறனின் பன்னாட்டு திரை பண்பாடு அறிவித்துள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய x பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், இயக்குனர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரைய பண்பாடு ஆய்வகம் கல்வி பணியில் மூன்றாம் ஆண்டில் கால் பதிக்கிறது. இயக்குனராகும் கனவுகளோடு வரும் வாய்ப்புகள் கிடைக்கப்பெறாத எளிய மாணவர்களுக்கு 100% உதவித்தொகையுடன் திரை கல்வியில் இளங்கலை பட்டப்படிப்பை வழங்கி வருகிறது. இளங்கலை திரைக்கல்வி 2025 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. வாழ்த்துக்கள் வெற்றிமாறன் சார் என்று கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இந்த மூன்றாண்டு இளங்கலை படிப்புக்கு https://iifcinstitute.com/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இயக்குநர் வெற்றி மாறனின் பன்னாட்டுத் திரை பண்பாடு ஆய்வகம் கல்விப் பணியில் மூன்றாம் ஆண்டில் கால் பதிக்கிறது. இயக்குநராகும் கனவுகளோடு வரும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறாத எளிய மாணவர்களுக்கு 100 % உதவித் தொகையுடன் திரைக் கல்வியில் இளங்கலைப் பட்டப்படிப்பை வழங்கி வருகிறது.… pic.twitter.com/fx1Pgg40Wk
— VijaySethupathi (@VijaySethuOffl) January 8, 2025
