தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர்தான் நடிகர் விக்ரம். இவர் எத்தனையோ திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சேது திரைப்படம் மூலமாகத்தான் தனக்கென ஒரு புகழை சினிமாவில் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தன்னுடைய கேரக்டருக்கு தகுந்தது போல உடலை மாற்றிக் கொண்டு நடிப்பதில் பெயர் போனவர். குறிப்பாக ஐ திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. இறுதியாக இவர் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது. அடுத்தபடியாக எஸ்யூ அருண்குமார் இயக்கியுள்ள வீரதீர சூரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. விரைவில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது விக்ரம் நடிக்க உள்ள 63 வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி மண்டேலா மற்றும் மாவீரன் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வினுடன் விக்ரம் கைகோர்த்துள்ளார். இது திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது.

தீவிர அரசியல் கதைக்களத்தை காமெடியாக சொல்வது தான் இவருடைய பெரிய பலம் என்று சொல்லலாம். படத்தில் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் விக்ரம் நடிக்க உள்ள 63வது திரைப்படத்தில் முதலில் நடிக்கப்பட குழுவினர் சாய் பல்லவி இடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் கதாநாயகிக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் அமரன் படத்தில் வெற்றிக்குப் பிறகு சாய் பல்லவியை ஹீரோயினியாக வைக்கலாம் என்று யோசித்து அவரை அழைத்த நிலையில் அவர் மறுப்பு தெரிவித்து விட்டாராம். இதனைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் மற்றும் கே ஜி எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
