அடேங்கப்பா 80 லட்சம் பேரா?.. BB சௌந்தர்யா நடித்துள்ள ரொமான்டிக் ஷார்ட் பிலிம்..!

By Nanthini on ஜனவரி 10, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் இறுதி கட்டத்தில் உள்ளனர். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏற்கனவே போட்டியாளர்களும் தற்போது உள்ளே வந்துள்ளனர். இந்த வாரம் மிட் வீக் எபிக்ஷன் இருக்கும் என கூறப்பட்டுள்ளதால் போட்டியாளர்கள் அனைவரும் சற்று கதிகலங்கி இருக்கின்றனர்.

   

இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர்தான் சௌந்தர்யா. இவர் ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டூ வில்லேஜ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார். மேலும் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ரஜினியின் தர்பார் மற்றும் திரௌபதி உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒட்டுமொத்த ரசிகர்களின் அன்பையும் பெற்றுவிட்டார்.

   

 

வீட்டில் பெரிதாக இவர் எதையும் செய்யவில்லை என்றாலும் அதுவே தனக்கு பிளஸ் பாயிண்ட் ஆக வைத்துக் கொண்டு ரசிகர்களை தன்வசம் கவர்ந்தவர். சவுண்டு சௌந்தர்யா என்று ரசிகர்கள் இவரை ஆரவாரமாக கொண்டாடி வருகிறார்கள். இப்படியான நிலையில் சௌந்தர்யா ஏற்கனவே வேற மாதிரி ஆபீஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ள நிலையில் மேரேஜ் காண்ட்ராக்ட் என்ற ஒரு தமிழ் குறும் படத்திலும் நடித்துள்ளார். இந்த வீடியோவை கடந்த 5 வருடத்தில் 81 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.