எல்லாரும் வேட்டி அவிழ்ந்து விழும் வரைக் குடிப்பார்கள்.. அவர்தான் ஒழுக்கத்தைக் கொண்டு வந்தார் –ரஹ்மான் சிலாகிப்பு!

By vinoth on ஜனவரி 10, 2025

Spread the love

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அதன் பின்னர் இந்தி சினிமா, ஹாலிவுட் மற்றும் உலக சினிமா என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே சென்றது.

   

ரஹ்மான் தன்னுடைய முதல் படமான ‘ரோஜா’வுக்காக தேசிய விருது வாங்கிய போது அவரது வயது 26தான். தன்னுடைய 15 ஆவது வயதில் இருந்து அவர் பல இசையமைப்பாளர்களிடம் இசைக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் எல்லாக் குழந்தைகளும் அனுபவிக்கும் குழந்தைப் பருவ மகிழ்ச்சிகளைத் தான் இழந்துவிட்டதாக ரஹ்மான் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

 

மேலும் இளையராஜா பற்றி பேசும்போது “நான் இசைக்கருவிகள் வாசிப்பவனாக இருந்தபோது கிட்டத்தட்ட எல்லா இசைக் கலைஞர்களுமே குடிப்பார்கள். ரெக்கார்டிங் முடிந்தாலே குடிப்பார்கள். வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் குடிப்பார்கள்.

அப்படிப்பட்ட இடத்தில் இளையராஜா சார்தான் வந்து அதை மாற்றினார். ஒரு ஒழுக்கமான சிஸ்டத்தை உருவாக்கினார். அதன் பின்னர்தான் நான் இவருக்கு வாசிக்கிறேன் என்று சொன்னால் எல்லாரும் மரியாதையாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். எனக்கு இளையராஜா சாரின் இந்த பண்புதான் மிகவும் ஈர்த்தது. அவரின் பாடல்கள் எல்லோருக்குமே பிடிக்கும்.” எனக் கூறியுள்ளார்.