பூஜை அறையில் கண்ணாடி வைப்பது எதற்காக…?அதனால் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா…?

By Meena on செப்டம்பர் 11, 2024

Spread the love

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்பது முக்கியமாக இருக்கும். நம் மனதில் உள்ள வேதனைகளையும் ஆசைகளையும் இறைவனிடம் மனம் உருகி சொல்லி பூஜை அறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்வோர் உண்டு. பூஜை அறையில் சக்தி அதிகரிக்க பல பொருட்களை வாங்கி வைப்பார்கள். அதில் ஒன்றுதான் முகம் பார்க்கும் கண்ணாடி. ஏன் இந்த முகம் பார்க்கும் கண்ணாடியை பூஜை அறையில் வைக்கிறார்கள். அதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.

   

முந்தைய காலங்களில் பூஜை அறையில் கடவுள்களின் படங்களோடு கண்ணாடியையும் வைத்து வழிபடும் முறையும் இருந்து வந்தது. கண்ணாடிக்கு அதன் முன் வைக்கப்படும் எந்த பொருளையும் பிரதிபலித்து பல மடங்காக்கி காட்டும் சக்தி உள்ளது. வீட்டின் முன்னே கண்ணாடி வைக்கும் போது அது கண் திருஷ்டியை நீக்கும் என்பது ஐதீகம்.

   

பூஜை அறையில் கண்ணாடியை வைத்து நாம் வழிபடும்போது நம் உடலின் நாடியை அது திறக்கும் என கூறப்படுகிறது. தெய்வத்தின் அருகில் இதை வைக்கும் போது தெய்வ நாடியும் மனித நாடியும் ஒன்று சேரும். இதனால் நம் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற்றப்படும். மேலும் நம் பிரார்த்தனைகள் பலிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கண்ணாடியை பூஜை அறையில் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி திசையில் வைக்க வேண்டும். புதிய கண்ணாடி மட்டுமே வைக்க வேண்டும் ஏனென்றால் கண்ணாடி மகாலட்சுமி ஆதிக்கம் பெற்ற பொருளாகும்.

 

கண்ணாடியை மட்டும் வைத்து வழிபடுவார்களும் இருக்கிறார்கள். அதுவும் நல்லது தான் அதை விட கண்ணாடியின் முன்பு பல பொருட்களை ஒரு சின்ன கிண்ணத்தில் வைத்து அதை கண்ணாடியில் பிரதிபலிக்கும்படி செய்தால் அது நல்ல பலன்களை நமக்கு தரும். அதாவது கண்ணாடியின் முன்பு ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் பச்சரிசி வைத்து அதில் மஞ்சள் மற்றும் நாணயங்கள் சேர்த்து அதன் பிம்பம் கண்ணாடியில் படும் மாதிரி வைக்க வேண்டும்.

அது இல்லை என்றால் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு மஞ்சள் நாணயம் இவற்றையும் வைக்கலாம். மேலும் கண்ணாடியின் முன்பு ஒரு சிறிய கிண்ணத்தில் நாணயங்கள் மட்டுமே கூட நிரப்பி வைக்கலாம். இப்படி உங்களுக்கு எது ஏதுவாக உள்ளதோ அதை நீங்கள் செய்து கொள்ளலாம். இப்படி பூஜை அறையில் கண்ணாடியை வைத்து வழிபடும்போது அந்த கண்ணாடியில் நம் வீட்டிற்கு வரும் மூதாதையர்களின் பிம்பம் அதில் விழுவதாகவும் இதன் மூலம் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படி கண்ணாடியின் முன்பு நமக்கு ஏற்ற பொருளை ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் பிம்பத்தை கண்ணாடியில் விழும் போது அது நமக்கு பன்மடங்காக பெருகி நம் வீட்டில் செல்வம் கொழிக்கும் ஐஸ்வர்யங்கள் உண்டாகும் என்பது ஐதீகம்.