செல்வதால் நடுத்தெருவுக்கு வரப்போகும் முத்து…கோபமடைந்த மீனா…சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…

By Meena on செப்டம்பர் 11, 2024

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் விஜயா மீனாவை வழக்கம்போல் திட்டுகிறாள். முத்துவும் அண்ணாமலையும் சப்போர்ட் செய்கின்றனர். மனோஜ் ரவுடி வந்து கொடுத்த லெட்டரை எடுத்து மாடிக்கு சென்று விஜயாவை மேலே கூப்பிடுகிறான். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி இனி காண்போம். 

   

இன்றைய எபிசோடில் மொட்டை மாடிக்கு வந்த விஜயா மனோஜிடம் என்னடா உனக்கு பிரச்சனை இப்படித்தான் போன் பண்ணி நடுராத்திரியில கூப்பிடுவியா அப்படின்னு கத்துகிறாள். உடனே மனோஜ் அந்த லெட்டரை கொடுத்து இப்படி ஒரு ரவுடி வந்து லெட்டர் குடுத்துட்டு போயிருக்காமா. இத பார்த்தாலே எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது அப்படின்னு சொல்கிறான். இவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும்போதே ரோகிணி அங்கு வந்து விடுகிறாள். இந்நேரத்துல இங்க வந்து நிக்குறீங்க என்று கேட்கிறாள். உடனே மனோஜ் நடந்ததெல்லாம் கூறி அந்த லெட்டரை காட்டுகிறான் உடனே ரோகினி இத நம்ம சமாளிக்கலாம் ஒரு பெரிய ரவுடிய நம்ம ஷோரூம் பாதுகாப்புக்கு வேலைக்கு வச்சுக்கலாம் அப்படின்னு சொல்லி பேசிக்கிறாங்க.

   

அடுத்ததாக மீனாவின் அம்மா முத்துவுக்கு போன் செய்து பேசுகிறாள். மீனா போன் சுவிட்ச் ஆஃப் என்று சொல்கிறாள். உடனே முத்து மீனாவை அழைத்து போனை கொடுக்கிறார். அப்போது மீனாவின் அம்மா மீனா விடம் என்ன மீனா வீட்டுக்கு வரேன்னு சொன்ன வீட்டுக்கு வரல அப்படின்னு கேட்கிறாள். இல்லமா இன்னைக்கு வரேன் நேத்து கொஞ்சம் வேலையா இருந்தது அப்படின்னு சொல்கிறாள். பின்னர் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள் மீனா. போகும் வழியில் செருப்பு தைக்கும் பாட்டி தாத்தாவிற்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போகிறாள். அப்போது எனக்கு ஒரு மகராசா வந்து வேலை கொடுத்து இருக்காங்க அம்மா அப்படின்னு சொல்றாங்க. உடனே முத்து அங்கிருந்து வருகிறான். எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். பிறகு மீனா அங்கிருந்து கிளம்புகிறாள்.

 

பின்னர் முத்து கார் செட்டுக்கு செல்கிறான். அங்கு செல்வம் எங்கடா காணோம் சவாரிக்கு போயிட்டானா அப்படின்னு மற்ற நண்பர்களிடம் கேட்கிறார் முத்து. உடனே மற்ற நண்பர்கள் செல்வமும் சவாரிக்கலாம் ஒன்னும் போகல என்ன பிரச்சனை தெரியல காலையிலேயே நல்லா ஃபுல்லா குடிச்சிட்டு வந்து இருக்கான் அப்படின்னு சொல்கிறார்கள். உடனே முத்து அவனுக்கு என்ன பிரச்சனை இந்நேரத்தில் அவன் குடிக்க மாட்டானே அப்படின்னு செல்வத்திடம் போய் அமர்ந்து என்னடா உனக்கு பிரச்சனை அப்படின்னு கேட்கிறான். 

உடனே வீட்ல தான் ஒரே பண பிரச்சனை அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் நடத்தணும்னு சொல்றாங்க. எனக்கு பணத்துக்கு எங்க போறதுன்னே தெரியல நம்மள மாதிரி ஆளுகளுக்கு யாருடா பணம் கொடுப்பா நமக்கெல்லாம் குடும்பம் குட்டி ஆசை பாசமா இருக்கக் கூடாது அப்படி இப்படின்னு அழுது கொண்டு பேசுகிறான். உடனே முத்து உனக்கு பணம் தானே வேணும் எப்படியாவது வரும் நான் ரெடி பண்றேன் அப்படின்னு சொல்கிறான். உடனே வீட்டுக்கு போய் பணத்தை கேட்கிறான். மீனா சத்தம் போடுகிறாள் நான் உழைச்சா காசு தான் அது. என் பர்மிஷன் இல்லாம நீங்க எடுத்துட்டு போக கூடாதுன்னு சொல்கிறாள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.