வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். மேலும் த்ரிஷா கோட் படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
இந்நிலையில் மாபெரும் பொருட் செலவில் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் 6 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 312 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.