“அடப்பாவிங்களா, இப்படி ஏமாத்திட்டீங்களே”… திருமணம் முடிந்து ஆசை ஆசையாக காத்திருந்த வாலிபர்… பேரதிர்ச்சி கொடுத்த மணப்பெண்…!

Spread the love

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள திண்டமங்கலத்தானூர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன், கருப்பட்டி வியாபாரம் செய்கிறார். இவருக்கு பிரகாஷ் (37) என்ற மகன் உள்ளார். கருப்பட்டி வியாபாரத்துக்கு மகன் பிரகாஷ் உதவியாக உள்ளார். பிரகாஷுக்கு சில ஆண்டுகளாகவே பெண் பார்த்து வருகிறார்கள். அதன் மூலமாக ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். சங்ககிரி மாவட்டத்தில் ப்ரோக்கர் மணிக்கு அர்ஜுனனை ஜலகண்டாபுரம் குமார் அறிமுகப்படுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பெண் இருப்பதாக கூறி அர்ஜுனனை வரவழைத்து முருகன் கோவிலில் பெண் பார்த்து உள்ளனர். அங்கு இருந்த ப்ரோக்கர் வள்ளி என்பவர் பிரியதர்ஷினி (27) என்ற பெண்ணை காட்டியுள்ளார். அப்பெண்ணுடன் இருந்த செல்வி என்ற பெண்ணை தாய் என்றும் பிரியா என்பவரை சகோதரியும் அறிமுகப் படுத்தியுள்ளனர். பின்பு பெண் வீட்டார் ஜலகண்டாபுரத்தில் உள்ள பிரகாஷ் வீட்டையும் வந்து பார்த்துள்ளனர்.

மறுநாளே அதாவது கடந்த மாதம் 27ஆம் தேதி ஜலகண்டாபுரத்தில் சித்தேஸ்வரர் கோவிலில் இருவருக்கும் திருமணமும் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புரோக்கர்களுக்கு கமிஷனாக ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கொடுத்துள்ளார். பிறகு திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்ததை மணப்பெண் மறுத்து வந்துள்ளார். சில நாட்களாகவே மறுத்து வந்துள்ளார். வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் பயத்திலிருந்துள்ளார். சந்தேகம் அடைந்த பிரகாஷ் வீட்டார் பெண்ணிடம் விசாரித்த போது தான் தெரியவந்துள்ளது. பிரியதர்ஷினி என்பவர் சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் என்றும் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது என்றும் கணவரை பிரிந்து வாழ்ந்த நிலையில் கட்டாயப்படுத்தி இரண்டாவது திருமணம் செய்து வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர் புரோக்கர் மணியிடம் கால் செய்து கேட்டபோது சரிவர பதில் சொல்லாமல் தொலைபேசியை துண்டித்துள்ளார். இது தொடர்பாக பிரகாஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். தனிப்படை கொண்டு விசாரித்ததில் பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணமான பெண்களை மீண்டும் திருமணம் செய்து பணத்தை பறித்து வந்தது தெரிய வந்துள்ளது. பின்பு மணப்பெண்ணும், இதில்  சம்பந்தப்பட்ட ஏழு பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். பிரியா, பிரியதர்ஷினி மற்றும் செல்வி ஆகிய மூவரையும் கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவான புரோக்கரை மற்றும் அவரது நண்பர் குமாரையும் மற்றும் புரோக்கர் வள்ளி என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால் தான் இதுபோல ஏற்கனவே செய்துள்ளார்களா . திருமணமான எத்தனை பெண்களை இது போன்ற செயலில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள் என்று தெரிய வரும்.

Divyamayakannan

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

2 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

3 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

3 மணத்தியாலங்கள் ago