கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை விவகாரம் குறித்து டிடிவி தினகரன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் சென்னையில் அமமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி மற்றும் வியூகங்கள் குறித்து நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விண்ணப்பத்தில் உள்ள இரண்டாம் பகுதியில் இருக்கும் கேள்விகளை சாதாரண மக்கள் பூர்த்தி செய்ய முடியாத வகையில் உள்ளது.
2005 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட கேள்விகளை தவிர்த்தால் நன்றாக இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைந்தால் 2026 ஆம் ஆண்டில் வெற்றி பெற முடியாது. இதையே தான் 2021 தேர்தலின் போது நான் கூறினேன். எடப்பாடியுடன் நான் நினைவதற்கு வாய்ப்பே இல்லை. தலைவருக்கான தகுதியே இல்லாதவராக அவர் செயல்படுகின்றார். வருகின்ற தேர்தலில் அதிமுக மூன்றாம் இடம் தான் பிடிக்கும். திமுகவிற்கும் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகள் குறித்து உளவுத்துறை அளிக்கும் ஆவணங்கள் அனைத்தும் போயஸ் கார்டனில் தான் இருக்கும்.
நானே பல அறிக்கைகளை கிழித்து எரிந்துள்ளேன். அதேபோல கொடநாட்டிலும் இருப்பதாக யாரோ கூறியுள்ளனர். அதை நம்பி காவலரை தாக்கி விட்டு ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். ஆனால் அதற்கு முன்னதாகவே போயஸ் கார்டனில் கிழித்து விட்டோம் . கொடநாட்டில் ஏதாவது கிடைத்தால் எனக்கு எதிராக பயன்படுத்தலாம் என பழனிச்சாமி நினைத்துள்ளார். பாவம் அங்கு சென்று தேடிக் கொண்டிருந்தார்.
பழனிச்சாமி என்ற துரோகத்தை வீழ்த்தாமல் நான் ஓய மாட்டேன். உளவுத்துறை அளித்த கோப்புகளை பச்சை பயிலில் ஜெயலலிதா வைத்திருத்ததாக கூறிய தினகரன் யாரையும் பிளாக்மெயில் செய்யும் எண்ணம் இல்லை என்பதால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதை எரித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பங்களாவுக்குள் ஆட்களை அனுப்பி அந்த பைலை இபிஎஸ் தேடியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…