உடல் எடையை குறைக்க ஊசி… நான்கே நாளில் 5 கிலோ வரை குறைந்த எடை… இறுதியில் இளம்பெண் சந்தித்த பேரதிர்ச்சி…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் உடல் எடை என்பது இளைஞர்கள் பலருக்கும் மிகப்பெரிய சவாலான விஷயமாக உள்ளது. மிக அழகிய தோற்றத்தை பெற வேண்டும் என்ற ஆசையில் சில நேரங்களில் உயிரையே ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய சில விஷயங்கள் நடந்து வருகிறது. சமூக ஊடகங்களில் பரவும் எடை குறைப்பு ஊசி விளம்பரங்களை நம்பியதால் சீனாவில் ஒரு இளம் பெண் மரணத்தின் விளிம்புக்கே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உள்ள 28 வயது சென் என்ற இளம் பெண் சமூக ஊடகங்களில் வந்த ஒரு விளம்பரத்தை நம்பி உடல் எடையை விரைவாக குறைப்பதற்கு ஊசிகளை வாங்கி உள்ளார்.

ஒரே ஊசியின் மூலம் 3.5 கிலோ வரை எடை குறையலாம் என்று நண்பரின் தகவலை நம்பி சுமார் 900 யுவான் செலவில் மூன்று ஊசிகளை அந்த பெண் வாங்கியுள்ளார். முதல்முறையாக பயன்படுத்துவதால் பாதுகாப்பாக இருக்க நினைத்து பாதி அளவு மட்டுமே ஊசி போட்டுக் கொண்ட அந்தப் பெண் அதன் பிறகு குமட்டல், வாந்தியை மற்றும் கடும் பசியின்மை போன்ற அறிகுறிகளை சந்தித்துள்ளார். ஆனால் இவை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் இயல்பான விளைவுகள் என்று நினைத்து அவற்றை புறக்கணித்துள்ளார்.

   

முதல் மூன்று நாட்களில் மூன்று கிலோவும் 4 நாட்களில் மொத்தம் ஐந்து கிலோவும் எடை குறைந்ததால் ஊசியின் மீது நம்பிக்கை வந்துள்ளது. ஆனால் நான்காவது நாளில் நிலமை மோசம் அடைந்து பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் வாந்தி எடுக்க தொடங்கியுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவருடைய வயிற்றின் உட்புறச் சுவர் கடுமையாக எரிந்திருந்தது கண்டறியப்பட்டது. இதய மின் வரைபடம் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர் ரத்தம் கக்கி நாடித்துடிப்பு நின்றதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

   

உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிர் காப்பாற்றப்பட்டாலும் அவர் மரணத்தின் விளிம்பில் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் பயன்படுத்திய ஊசிகள் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட போலி மருந்துகள் என்றும் உரிமம் இல்லாத தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு திருடப்பட்ட நீரிழிவு மருந்துகள் நிரப்பப்பட்டிருப்பதும் தெரியவந்தது. உண்மையில் ஒவ்வொரு ஊசியின் மதிப்பு வெறும் 4 யுவான் மட்டுமே என்றாலும் அது பல மடங்கு அதிக விலையில் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரவி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் எந்த விளம்பரத்தையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்றும் இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது.