சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசி வருகிறார். வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி அவர் டெல்லி செல்ல உள்ள நிலையில் இபிஎஸ் உடனான ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் NDA கூட்டணியில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி முடிவுகளை எடுக்க ஈபிஎஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்களின் சந்திப்பு அரசியலில் கவனம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் ஓபிஎஸ் கூட்டணியில் இணைவாரா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
