1 இல்ல 2 இல்ல 6 கல்யாணம்… மொத்தத்தையும் மூடி மறைத்த மனைவி… ஆடிப்போன காதல் கணவர்… கல்யாண ராணி பற்றி வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

By Nanthini on கார்த்திகை 4, 2025

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார் பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகின்றார். இவர் தன்னுடைய குழந்தைகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு காதல் ஆக மாறியது. பிறகு 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டோம். தற்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள பாட்டியை பார்க்க செல்வதாக கூறி குழந்தைகளுடன் சென்ற மனைவியை காணவில்லை.

நான் ஆந்திரா சென்று என்னுடைய குழந்தைகளை மீட்டு சொந்த ஊர் வந்து மனைவியை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார் அளித்தேன். போலீஸ் விசாரணையில் அவர் சொந்த விருப்பத்தில் சென்றதாக கூறினார். பிறகு எனது மனைவியின் தாய் வீட்டுக்கு சென்று விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. மனைவியின் கடந்த காலத்தைக் கேட்டு ஒரு நொடி ஆடிப் போய்விட்டேன். மனைவியின் வண்டவாளம் தண்டவாளத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி பிறகு ஏதோ காரணம் காட்டி என் மனைவி வெங்கடேசனை மிரட்டியுள்ளார்.

   

அவரை விரட்டி அடித்து விட்டு தொடர்ந்து இருவரும் பிரிந்த நிலையில் 2016 கோவையை சேர்ந்த சுரேஷ் என்பவரை ஆசை வலையில் வீழ்த்தி இரண்டாவதாக திருமணம் செய்தார். திருமணம் முடிந்து சில மாதங்களை ஆன நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் சுரேஷ்குமார் திடீரென இறந்து போனதாக தெரிகிறது. பிறகு 2017 ஆம் ஆண்டு என் மனைவிக்கு சுரேஷ்குமார் மூலம் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தற்போது மனைவியின் தாய் வளர்த்து வருகின்றார். இதனை தொடர்ந்து செல்வராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பில் இருந்தார். அவரையும் ஒரு கட்டத்தில் பிரிந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு மதுரையை சேர்ந்த லிங்குசாமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமடைந்தார். கர்ப்பமாக இருந்த போதுதான் என்னுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது.

   

என்னுடன் பழகுவதை அறிந்த லிங்குசாமி திட்டியதால் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கர்ப்பத்தை கலைத்தார். இந்த நிலையில் திடீரென லிங்குசாமி இறந்தார். பிறகு மூராறு பாளையம் வந்த அவர் எனக்கு திருமணம் ஆகவில்லை இனி உங்களுடன் தான் இருப்பேன் என்று என்னிடம் கூறியதால் நான் அவரை நம்பி திருமணம் செய்தேன். என்னுடைய வீட்டில் இருந்த மூன்று லட்சம் பணம் மற்றும் ₹3000 பவுன் நகைகளை எடுத்துச் சென்றுவிட்டார். தற்போது ஆம்பூரை சேர்ந்த மணிகண்டனை ஆறாவதாக திருமணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. என் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் தவிக்கிறேன். என் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.