வங்கிகளில் நகைக்கடன் வட்டி விகிதம்… வாடிக்கையாளர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு ..!

By Nanthini on கார்த்திகை 4, 2025

Spread the love

அவசர தேவைக்காக தங்கத்தை விற்காமல் அதனை அடமானம் வைத்து பணம் பெற விரும்பினால் அதற்கு நகை கடன் ஒரு சிறந்த வழிமுறையாகும். தற்போதைய சூழலில் பல பொதுத்துறை வங்கிகள் மிகவும் குறைவான வட்டி விகிதத்தில் நகை கடன்களை வழங்கி வருகின்றன. தனிநபர் கடன்களை காட்டிலும் நகை கடனுக்கு வட்டி விகிதங்கள் பொதுவாக குறைவாகத்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்க நகைகளின் கடனுக்கான தேவை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதுவே தங்கத்தின் விலை ஏற்றம் காரணமாக மக்கள் அதிக மதிப்புள்ள கடனை பெற முடிவதற்கு காரணமாகும்.

இந்நிலையில் நாட்டின் முன்னணி வங்கிகளில் மிக மலிவான தங்க கடன் வட்டி விகிதத்தை வழங்கும் வங்கிகளின் தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி ஆண்டு 8.35 சதவீதம் என்ற மிகக் குறைந்த வட்டி விகிதத்தை வழங்கி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக இந்தியன் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி இரண்டும் 8.75 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன. மேலும் கோடக் மகேந்திரா வங்கி 9 சதவீதம் வட்டி விகிதத்திலும், HDFC வங்கி 9.30 சதவீதம் பட்டி விகிதத்திலும் நகை கடன்களை வழங்குகின்றன.