இன்று காலையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். கடந்த 2021 ஆம் ஆண்டில் அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றிருந்தார். ஜெயலலிதா முதல் ஓபிஎஸ் வரை அதிமுகவில் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்த இவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
