தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என்று அறிவித்தார். இதில் மாணவர்களுக்கு சிறப்பம்சமாக கணக்குப்பதிவியல் தேர்வின் போது மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிப்பது இதுவே முதல் முறையாகும். இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
